வேகமான வாழ்க்கை முறையால் தற்போது பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள். இப்பழங்களை உண்பதால் வாயில் புண் வயிற்றுப் போக்கு, ஒவ்வாமை போன்ற வியாதிகள் ஏற்பட்டு நாளடைவில் குடல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இதற்குக் காரணம் காய்களைப் பழுக்க வைக்க வணிகர்களால் பயன் படுத்தப்படும் கல்சியம் கார்பைடு என்னும் இரசாயனம்தான்என கண்டறியப்பட்டுள்ளது.அது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இயற்கையில் காய் பிஞ்சுகளைமுற்றச் செய்வதும் பழுக்கச் செய்வதும் எதிலீன்என்னும் வாயு நிலை ஹோர்மோனே. இது எல்லாக் காய்களிலிருந்தும் இயற்கையாக வெளியேறும். இருந்தாலும் ...
Read More »கொட்டுமுரசு
செத்துடலாம்னு தோணுதா?
‘வாழ்க்கையே பிடிக்கல, என்னை யாரும் புரிஞ்சு கொள்ளல , நான் உயிரோட இருந்து யாருக்கு என்ன லாபம் ‘ இப்படியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? இப்படிச் சதாசர்வகாலமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நண்பரைக் கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தக் கொஞ்சம் படியுங்க. முதலில் தற்கொலை எண்ணம் என்பது தற்போது அதிகரித்துக் கொண்டு வருகின்ற பெரும் உளவியல் சிக்கல் ஆகும். சிலர் எப்போதும் ஆன்லைனிலேயே இருப்பார்கள். 5000 நண்பர்களை பேஸ்புக்கில் கொண்டிருப்பார்கள். தினம் பத்து பேஸ்புக் பதிவுகள் நூற்றுக்கணக்கான போலோவேர்ஸ் என்று அவர்கள் வாழ்க்கையே வண்ணமயமாக இருப்பதாக ...
Read More »காக்கை செய்வது சுலபம்!
‘காலுக்கு சுள்ளி கிழிந்த குடைத்துணி சிறகுக்கு கண்ணுக்கு பப்பாளி விதை காவென்று ஊதுங்கள் காதுக்குள் பறந்துவிடும் காக்கையென உயிர்பெற்று ஆம், காக்கை செய்வது சுலபம்!’ காக்கை கா…கா… என்று மட்டும் கத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காக்கையின் குர லில் பலவிதமான சத்த பேதங்கள் உள்ளன. சில சமயம் குழந்தையின் மழலை போல் இருக்கும். காக்கையின் மிழற்றல் இனிமை. காக்கையின் கரைதல் புதுமை. சில சமயம் அடித்தொண்டையில் இருந்து கர்… கர்… என்று குரல் எழுப்பி நிறுத்திக் கொள்ளும். நள்ளிரவில் விழித்துக்கொள்ளும். விடியவில்லை என்று ...
Read More »‘வாழ்வின் முட்கள் மீது நான் விழுந்தேன்’!
ஜி.நாகராஜன் தன் மரணப் படுக்கையில் கடைசியாக உச்சரித்தது, ஷெல்லியின் கவிதை வரிகள்: ‘வாழ்வின் முட்கள் மீது நான் விழுந்தேன்! ரத்தம் வடிக்கிறேன்…’. இதை அவர் சொன்னபோது, நான் அருகில் இருந்தேன். அவருடைய வாழ்க்கை பற்றிய தீர்க்கமான சுய அவதானிப்பு. இதை என்னிடமோ, அருகில் இருந்த மற்றொரு நண்பரான சிவராமகிருஷ்ணனிடமோ அவர் சொன்னதாகத் தெரியவில்லை. தன் வாழ்வின் பிரகடனம்போல் இதை உச்சரித்துவிட்டுக் கண் மூடியவரின் உயிர், அந்த இரவின் ஏதோ ஒரு தருணத்தில் பிரிந்தது. 1981-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி காலையில் மதுரை அரசு ...
Read More »அவுஸ்திரேலியாவில் குடியேறுவதில் மேலும் சிக்கல் நிலை!
அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration விசாவின் points system இல் மாற்றம் ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. Skilled Migration விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் புள்ளிகள் points system ஊடாக கணக்கிடப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதன்மூலம் 60 புள்ளிகள் பெற்றால் மட்டுமே குறிப்பிட்ட நபர் ஒருவர் பல துறைகளில் Skilled Migration ஊடாக அவுஸ்திரேலியாவில் குடியேற முடியும். இந்த நிலையில் இம்முறைமையானது எதிர்வரும் ஜுலை 1 ஆம் திகதியிலிருந்து இது 65 புள்ளிகளாக உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 30 ஆம் திகதி ...
Read More »மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வரம் எது?
`நம் எல்லோரிடமுமே பச்சாதாபப்படும் குணம் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். என்ன… அதை வெளிப்படுத்தத்தான் போதுமான தைரியம் இல்லை’ – இப்படிக் குறிப்பிடுகிறார் அமெரிக்கக் கவிஞரும் மனித உரிமைப் போராளியுமான மாயா ஏஞ்சலோ (Maya Angelou). மற்றவர்களின் மனமறிந்து நடப்பது, பிறருக்காக இரக்கப்படுவது என்பது மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வரம். மற்றவர்களுக்காகப் நாம் இரங்கும்போது, அவர்களின் எதிர்மறை சக்தி விலகி, பாசிட்டிவ்வான சக்தி அவர்களை ஆட்கொள்ளுகிறது. `நமக்காக இரக்கப்படவும், நம்மை நினைத்துப் பார்க்கவும் ஒரு ஜீவன் இருக்கிறது’ என்கிற எண்ணமே பெரிய பலத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடும். ...
Read More »மரணம் எங்கே தொடங்குகிறது?
இதயம், மூளையின் துடிப்பு ஆகியவற்றைச் சார்ந்தே உயிரின் லயம் உள்ளது. இந்த முடிவை மருத்துவத் துறையோடு இணைந்து இலக்கியம், கவிதை, தத்துவம் போன்றவை அங்கீகரிக்கின்றன. மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை எந்த உடல் உறுப்பின் செயல் இழப்பிலிருந்து முடிவு செய்யலாம் என்பதையும் மருத்துவ அறிவியல்தான் கேட்கிறது. உடலுறுப்பு மாற்று சிகிச்சைகளின் நடைமுறைகள் வெளிப்படையாக இருக்கும் பொருட்டு, மூளைச் சாவு நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் விதிமுறைகளைக் கடந்த மாதம் கேரள அரசு வெளியிட்டது. மருத்துவ அறிவியலில் ஏகப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் (ஒருவேளை அதுவே காரணமாகவும் இருக்கலாம்) மருத்துவ ரீதியாகவும் ...
Read More »ஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும்!
ஊருக்குள் வந்த சிறுத்தை தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மனிதர்களைத் தாக்கியது. மனிதர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறுத்தையைத் தாக்கினார்கள். தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கொல்லலாம் என்று ஒரு கிராமியச் சொற்தொடர் உண்டு. எனவே ஊருக்குள் நுழைந்து மனிதர்களைத் தாக்கிய சிறுத்தையை மனிதர்கள் தாக்கியத்தில் ஒரு தர்க்கம் உண்டு. வீட்டுக்குள் வரும் விசப்பாம்பை அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. அதுபோலவே ஊருக்குள் திரியும் கட்டாக்காலி நாய்க்கு விசர் பிடித்தாலும் அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. ஆனால் அம்பாள் குளத்தில் சிறுத்தையைக் கொன்ற விதமும், கொன்ற பின் கொண்டாடிய விதமும் தான் ...
Read More »தூத்துக்குடிக்காக சர்வதேச அமைப்பை உருவாக்கும் திருமுருகன் காந்தி!
ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேச பிரச்னை. அதைத் தமிழ்நாட்டின் பிரச்னையாக மட்டும் பார்க்கக் கூடாது. இதைச் சர்வதேச பிரச்னையாக கொண்டுபோகும் வேலைகளில் இறங்கி ‘தூத்துக்குடி படுகொலைக்கும், தமிழ்நாட்டுக்குமான நீதி’ எனும் தலைப்பில், ஐரோப்பாவில் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது மே பதினேழு இயக்கம். தென்னாப்பிரிக்காவில் `மரிக்கானா’ (Marikana) எனும் சிறு நகரத்தில் போராடிய சுரங்கத் தொழிலாளர்களின் மீது 2012-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50. அப்போது நடந்த துப்பாக்கிச்சூடு லொன்மின் (Lonmin) என்ற கனிமச் சுரங்க நிறுவனத்துக்கு ...
Read More »போராளிகள் ஒன்றிணைய வேண்டும்!” – மேதா பட்கர்
நாட்டின் (இந்தியா) உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பெயரில் கொண்டுவரப்படும் திட்டங்கள் வணிகமயமாகத்தான் இருக்கின்றன. அவை உண்மையான வளர்ச்சியைக் கருத்தில் கொள்வதில்லை – மேதா பட்கர் 63 வயதிலும் மக்கள் போராட்டங்களின் ஆதரவுக் குரலாக இந்தியா முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கிறார் மேதா பட்கர். குஜராத்தின் நர்மதா ஆற்றில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணைக்கு எதிரான போராட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். இந்தியா முழுவதும் நடைபெறும் சுற்றுச்சூழல் பிரச்னைகள், குடிசைகள் வெளியேற்றம் என விளிம்புநிலை மக்களின் குரலாகத் தொடர்ந்து களமாடி வருகிறார். ஸ்டெர்லைட், சென்னைக் குடிசைப் பகுதி வெளியேற்றம் போன்ற பிரச்னைகளுக்காகச் சமீபத்தில் ...
Read More »