Home / செய்திமுரசு / கொட்டுமுரசு

கொட்டுமுரசு

இப்பகுதியில் சகஊடகங்களில் வெளியான பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கையில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவது எப்படி?

வெற்றியாளர்கள் எந்தவொரு செயல்களை செய்வதற்கு முன்பும் சரியாக திட்டமிடுவார்கள். அப்படி திட்டமிட்டு செயல்படுவது வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்: காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் அன்றைய நாளில் என்னென்ன வேலைகளையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் நிறைய பேர் உண்டு. மறுநாளில் முடிக்க வேண்டிய வேலைகளை நினைத்து இரவில் தூக்கத்தை தொலைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வெற்றியாளர்கள் எந்தவொரு செயல்களை செய்வதற்கு முன்பும் ...

Read More »

ரத்வத்த சம்பவம்: அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து கவலை எழுப்புகிறார் அம்பிகா

சிறைச்சாலை முகாமைத்துவம், கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறை வளாகங்களுக்குள் போதையில் வலுக் கட்டாயமாக பிரவேசித்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்குப் பின்னரான நிகழ்வுகள் தொடர்பாக , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ட்விட்டரில் பல கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். ரத்வத்தயின் நடத்தையால் பாதிக்கப்பட்ட கைதிகள் எவ்வாறு துரிதமாக அமைச்சர் ராஜபக்ஷவின் வருகை தொடர்பாக அழைப்பு விடுக்கும் செய்தியை அனுப்பக்கூடியதாக ...

Read More »

மீண்டும் அரியணை ஏறுவாரா ட்ரூடோ?

கனடாவில் இன்று பொதுத்தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இரண்டு வருடகாலப்பகுதியில் இரண்டாவது தடவை கனடாவில் பொதுமக்கள் பொதுதேர்தலில் வாக்களிக்கின்றனர். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக தேர்தலை ( இரண்டு வருடகாலத்திற்கு முன்பாக ) தேர்தலை அறிவித்த கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகஸ்ட் மாதம் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் – மூன்றாவது முறையாக அரியணை ஏறுவதே அவரது நோக்கம். ஐந்து வாரகாலமாக தீவிரமாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து தலைவர்களும் வாக்காளர்களை நோக்கி தங்கள் ...

Read More »

அரசாங்கம், ஐநாவை… கையாளத் தொடங்கி விட்டதா?

ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல மீளாய்வு அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது போலவே வெளிவந்திருக்கிறது. அது சிங்கள கூட்டு உளவியலை ஒப்பீட்டளவில் அதிகம் பயமுறுத்தாதவிதத்தில் இலங்கை முழுவதுக்குமான மனித உரிமைகள் தொடர்பான ஓர் அறிக்கை என்ற வெளித்தோற்றத்தை காட்டுகிறது. இந்த அறிக்கை இவ்வாறு அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக வெளிவருவதற்கு உரிய வேலைகளை அரசாங்கம் கடந்த சில மாதங்களாக தீவிரமாகச் செய்துவந்தது. இந்த அரசாங்கம் ...

Read More »

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா?

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை.ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச்  சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன்.ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து ...

Read More »

ஜெனிவா:48 சொன்னதும் சொல்லாததும்!

மனித உரிமைப் பேரவையின் இந்த மாத 48வது அமர்வில் 46:1 இலக்கத் தீர்மானத்தின் முடிவுக்கிணங்க ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் முன்வைத்த வாய்மூல அறிக்கையை வழக்கம்போல இலங்கை அரசு நிராகரித்துள்ளது. சீனா அதற்கு பக்கப்பாட்டு வாசித்துள்ளது. கோதபாய அரசு செய்யத் தவறியவைகளையும் செய்ய வேண்டியவைகளையும் ஆணையாளரின் அறிக்கை பட்டியலிட அதில் சொல்லப்படாதவைகளை தமிழர் தரப்பு பட்டியலிடுகிறது. அப்படியானால் 49ம் 51ம் அமர்வுகளுக்கு முற்கூட்டியே அவ்விடயங்களை பேரவைக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு ...

Read More »

பாரதி: ஒரு புரிதல்!

பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி எழுத்தாளர்களும் வாசகர்களும் அவரைக் குறித்தும் அவரது எழுத்துகளைக் குறித்தும் எழுதியும் பேசிக்கொண்டும் இருக்கும் நிலையில், அவரைப் பற்றிய கடுமையான விமர்சனங்களும் எப்போதும்போலத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பாரதியைக் குறித்து திராவிடர் கழகத்தின் இதழ் ஒன்றில் வெளியாகிவரும் கட்டுரைத் தொடர் அதற்கு ஒரு உதாரணம். அந்தக் கட்டுரைத் தொடரின் ஆசிரியர் அடுக்கடுக்காக வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை: பிராமணர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது, இந்து மதத்தைக் காப்பதற்கான ஆரிய சமாஜத்தின் ...

Read More »

தமிழரசுக் கட்சியைக் காப்பாற்ற முடியுமா ?

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் நடந்த இரண்டு ஊடகச்சந்திப்புகள் நமக்கு எதை உணர்த்துகின்றனவென்றால் கூட்டமைப்புக்குள் மட்டுமில்ல தமிழரசுக் கட்சிக்குள்ளும் குழப்பம் என்பதைத்தான். இரண்டு கடிதங்களை அனுப்பப்போய் கூட்டமைப்பு குழம்பிப் போயிருக்கிறது என்பது சரியா? இல்லை.கூட்டமைப்பு ஏற்கனவே குழம்பித்தான் இருக்கிறது. ஆனால் இந்த கடிதங்களால் அந்தக் குழப்பம் வெளிப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.கூட்டமைப்பு ஏன் குழம்பி காணப்படுகிறது? ஏனென்றால் அது ஒரு வலிமையான கூட்டாக இல்லை. அது இதுவரையிலும் பதிவு செய்யப்படாத ஒரு ...

Read More »

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள்

கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில் 14 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையின் தலைப்பு “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்” என்பதாகும். வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐநா கூட்டத்தொடரையொட்டித் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அரசாங்கம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறது. முதலாவதாக அனைத்துலக விசாரணை மற்றும் அனைத்துலக ...

Read More »

தமிழ் தலைமைகள் என்ன செய்யப் போகிறார்கள்?

இந்த மாத 48வது ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார். அடுத்த வருட மார்ச் மாத 49வது அமர்வில் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அடுத்த செப்டம்பரில் இடம்பெறும் 51வது அமர்விலேயே இலங்கை விவகாரம் தொடர்பான ஆணையாளரின் பூரண அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்படும். இந்த ஒரு வருட இடைவெளியில் தமிழ்த் தேசிய தலைமைகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாத்தியமில்லையெனில், அது சிங்களத் தரப்புக்கான வெற்றியை தங்கக் ...

Read More »