Home / செய்திமுரசு

செய்திமுரசு

தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர்

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னால் முடிந்த பணியை நிறைவாக செய்துநின்ற தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் (வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்) அவர்கள் 85வது வயதில் மறைந்த நிலையில், தன்னால் முடிந்தவரை இணைத்துக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்டியாக செயற்பட்ட அவரின் நினைவுகளை ஆழ எங்களின் மனங்களில் பதித்துக்கொள்ளுகின்றோம் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 19-04-2022 வெளியிடப்பட்ட அவ்வறிக்கையின் முழுவிபரம் வருமாறு: தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் தமிழீழ மக்களின் ...

Read More »

தமிழர் இனவழிப்பை மறைக்கும் சிறிலங்காவின் கிறிக்கற் – கவனயீர்ப்பு நிகழ்வு

வெள்ளிக்கிழமை 11-02-2022 மாலை 5.30 மணி தொடக்கம் சிட்னி SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கற் அணி பங்குபற்றுகின்ற போட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பு பற்றிய கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது. துடுப்பாட்டம் (கிரிக்கற்) எனும் விளையாட்டுக்கூடாக தமிழர் மீதான இனவழிப்பை மூடிமறைக்கும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலை வெளிப்படுத்தும் வண்ணம் பதாகைகளை தாங்கியவாறு இந்நிகழ்வு நடைபெற்றது. Don’t Let Sri Lankan Cricket Hide Tamil Genocide என்ற ...

Read More »

கேணல் கிட்டு வெற்றிக் கிண்ணப் போட்டிகள் – 2022 – பேர்த்

வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 29 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்திய வெற்றிக்கிண்ண போட்டியில் கால்பந்தாட்டம், மட்டைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் உட்பட பல விளையாட்டுகள் 09/01/2022 அன்று சிறப்பாக இடம் பெற்றன. காலை 8:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் அவுஸ்திரேலிய ...

Read More »

உலகம் 2021 எப்படி இருந்தது?

கரோனா பெருந்தொற்று அன்றாட நடவடிக்கைகளில் நீக்கமற இடம்பிடித்துவிட்டது. 2021-ன் மிக முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோற்று ஜோ பைடன் அதிபரானது. பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகல், ஐநாவின் உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க நிதியை விலக்கிக்கொள்ளுதல், ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து விலகல், வடகொரியாவுடன் மோதல் போக்கு என்று உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக ட்ரம்ப் கருதப்பட்டார். அவரது தோல்வி பலரையும் பெருமூச்சுவிட வைத்தது. ஆப்பிரிக்க-இந்திய வம்சாவளியினரான ...

Read More »

கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் பெருமளவான காவல் துறை  அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காவல் துறை  தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை (1) இரவு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு கடமையில், சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். ...

Read More »

தமிழினப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தியவர் பேராயர் டுட்டு

தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளி பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் பயணம் நிறைவடைந்தமையிட்டு வடக்கு-கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவெறி அடக்குமுறைக்கெதிராக 1970 களிலிருந்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் குரலாகவும், அம்மக்களோடு பயணித்து மக்களின் விடுதலைக்காக உழைத்து ‘வானவில் தேசமான’ தென் ஆபிரிக்காவை கட்டியெழுப்பிய ...

Read More »

அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் உச்சத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 கோடியே 52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 5 ...

Read More »

ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா

ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ந் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இந்த ...

Read More »

மனித வியாபாரம், ஆட்கடத்தலிலிருந்து உறவுகளைப் பாதுகாப்போம்!

மனித வியாபாரம்  என்பது திட்டமிட்டு ஒழுங்கமைத்து செய்யப்படும் குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அப்பாவிகளை இலக்காக கொண்டு, தமது சுயநலத்துக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஏமாற்றி, மோசடி செய்து, வஞ்சித்து, சுரண்டுவதன் ஊடாக, மனித வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இருந்த போதிலும், ஆட்கடத்தல் என்பது தானே ஒருவர் முன்வந்து சட்டவிரோதமாக தமது நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு செல்வதாகும்.சட்டவிரோதமாகச் செய்யப்படும் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு அடுத்ததாக உலகில் இரண்டாவது மிகப்பெரிய குற்றத் தொழிலாக ...

Read More »

நல உதவிகளிலேயே வாழ நாங்கள் ஆஸ்திரேலியா வரவில்லை: ஈழத்தமிழ் அகதி

ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர ஆஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த எங்களது குடும்பம் மீள்குடியமர ஆஸ்திரேலியாவில் எங்கள் அருகாமையில் வசித்தவர்கள் உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற, உடைகளைப் பெற, வேலைகளைப் பெற உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு உணவுக்கூட அளித்திருக்கிறார்கள்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More »