நிகழ்வுமுரசு

தமிழர் இனவழிப்பை மறைக்கும் சிறிலங்காவின் கிறிக்கற் – கவனயீர்ப்பு நிகழ்வு

வெள்ளிக்கிழமை 11-02-2022 மாலை 5.30 மணி தொடக்கம் சிட்னி SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கற் அணி பங்குபற்றுகின்ற போட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பு பற்றிய கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது. துடுப்பாட்டம் (கிரிக்கற்) எனும் விளையாட்டுக்கூடாக தமிழர் மீதான இனவழிப்பை மூடிமறைக்கும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலை வெளிப்படுத்தும் வண்ணம் பதாகைகளை தாங்கியவாறு இந்நிகழ்வு நடைபெற்றது. Don’t Let Sri Lankan Cricket Hide Tamil Genocide என்ற பதாகையுடன் என்ற கோசங்களும் எழுப்பப்பட்டன. Stop Stop – Genocide, Shame Shame ...

Read More »

கேணல் கிட்டு வெற்றிக் கிண்ணப் போட்டிகள் – 2022 – பேர்த்

வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 29 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்திய வெற்றிக்கிண்ண போட்டியில் கால்பந்தாட்டம், மட்டைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் உட்பட பல விளையாட்டுகள் 09/01/2022 அன்று சிறப்பாக இடம் பெற்றன. காலை 8:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் அவுஸ்திரேலிய தேசியக் கொடியை திரு. நந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை ...

Read More »

தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – பிரிஸ்பன்

இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக, 06-02-2021 சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மூன்று இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. அவ்வகையில் பிரிஸ்பன் பெருநகரில் மதியம் 1 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டு செயற்பாட்டாளர்களின் உரைகள் இடம்பெற்ற பின்னர், பேரணியாக நகர்ப்பகுதி ஊடாக நடந்து சென்று நிறைவுபெற்றது.

Read More »

தமிழர் அடக்குமுறைநாள் பேரணி – மெல்பேர்ண்

அவுஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் தமிழர் அடக்குமுறை நாள் பேரணி அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறிலங்கா அரசானது பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி அன்று 73ஆம் ஆண்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடிய வேளையில் அதனை தமிழர் அடக்குமுறை நாள் என பிரகடனப்படுத்தி பல்லின மக்களின் ஆதரவுடன் போராட்டம் மெல்பெர்னில் இன்று நடைபெற்றது. 1948 பெப்ரவரி 4ஆம் நாள் பிரித்தானியரிடமிருந்து ஆட்சியதிகாரம் கைமாறப்பட்ட நிலையில் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏனைய இனத்தவர் மீது வன்முறைகளை ஏவத்தொடங்கியது. எண்ணிலடங்கா அடக்குமுறைகளை பல்வேறு வழிகளில் மக்கள் மீது ...

Read More »

தமிழர்களின் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – சிட்னி

இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை” என்ற நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக,  இன்று 06-02-2021  சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் மூன்று இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. சிட்னி பரமட்டா நகரில் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் இளையவர்கள் முதல் மூத்தவர்கள் என பெருமளவான தமிழ் மக்களோடு பல்லின சமூகமக்களும் என பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இளம்செயற்பாட்டாளர் ரேணுகா இன்பகுமார், நியுசவுத் மாநில அவை உறுப்பினர் Dr Hugh Mcdermott, அவுஸ்திரேலிய முன்னாள் ...

Read More »

தமிழர் பெருவிழா தைத்திருநாள் 2021 – மேற்கு அவுத்திரேலியா

தைப்பொங்கல் பெருவிழா அவுத்திரேலிய தமிழர் பேரவை மேற்கு அவுத்திரேலியா மற்றும் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மேற்கு அவுத்திரேலியா ஒழுங்குபடுத்தலில் Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112 என்னும் இடத்தில் நடைபெற்றது. 30.01.2021 சனிக்கிழமை மாலை 3.40 மணிக்கு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து அவுத்திரேலிய பூர்வீக மக்கள் கொடி, அவுத்திரேலிய தேசியக் கொடி, தமிழீழத் தேசியக் கொடி என்பன ஏற்றப்பட்டு கொடி வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழர் பெருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து சிறியோர் பெரியோருக்கான விளையாட்டுக்கள், ...

Read More »

மெல்பேணில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர்நாள் – 2020

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய மாவீரர்களை ஒருசேர நினைவூகூரூம் மாவீரராநாள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. கோவிட் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, East Burwood Reserve எனும் இடத்தில் மதியம் 1.20 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் 30 நிமிடங்களுக்கு என முற்பதிவுசெய்யப்பட்ட சுழற்சி முறையில் பலரும் பங்குகொண்டனர். முதன்மைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு லூயின் பிரசாத் அவர்கள் ஏற்றிவைக்க, அவஸ்திரேலியத் தேசியக்கொடியை மருத்துவர் ஆதவன் சிறீதர் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ...

Read More »

கான்பராவில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020

கான்பராவில் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் வழமையை விட ஏராளமானோர் கலந்துகொண்டதுடன் இளையோரின் மாவீரர் பாடலுக்கான நடனம் மற்றும் மாவீரர் நாள் பற்றி இளையோருக்கு விளக்கும் நாடகம் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வு பற்றிய எஸ்பிஎஸ் தமிழ் வானொலி பதிவு https://www.sbs.com.au/language/tamil/audio/a-compilation-of-maaveerar-naal-events-from-cities-in-australia

Read More »

பேர்த்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020

மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த்தில் மாவீரர் நாள் நிகழ்வு 27-11-2020 அன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கோவிட் 19 பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவித்தல்களுடன் மாவீரர் நாள் பிரதான நிகழ்வுகளை திரு. நிமலகரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒலிபரப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து மாலை 07.05க்கு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைச்தொடர்ந்து, அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை திரு பிறேமச் செல்வம் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை திருமதி கிறிஸ்டின் ஓபூயிஸ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ...

Read More »