தமிழர் பெருவிழா தைத்திருநாள் 2021 – மேற்கு அவுத்திரேலியா

தைப்பொங்கல் பெருவிழா அவுத்திரேலிய தமிழர் பேரவை மேற்கு அவுத்திரேலியா மற்றும் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மேற்கு அவுத்திரேலியா ஒழுங்குபடுத்தலில் Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112 என்னும் இடத்தில் நடைபெற்றது.

30.01.2021 சனிக்கிழமை மாலை 3.40 மணிக்கு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து அவுத்திரேலிய பூர்வீக மக்கள் கொடி, அவுத்திரேலிய தேசியக் கொடி, தமிழீழத் தேசியக் கொடி என்பன ஏற்றப்பட்டு கொடி வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழர் பெருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது.

தொடர்ந்து சிறியோர் பெரியோருக்கான விளையாட்டுக்கள், தமிழர் கிராமிய விளையாட்டுக்கள், கலாச்சார நிகழ்வுகள், வினோத உடை போன்ற இனிமையான நிகழ்வுகளும் இடம் பெற்றன.

நிகழ்வில் பங்குபற்றியோருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் தமிழர் பெருவிழா தொடர்பாக நடத்தப்பட்ட திருக்குறள் மனனப் போட்டிக்கான சான்றிதழ்கள் பரிசில்களும் வழங்கப்பட்டன. கேணல் கிட்டு உட்பட்ட பத்து வேங்கைகள் நினைவாக நடாத்தப்பட்ட மட்டைப்பந்து போட்டிக்கான வெற்றிக் கிண்ணங்களும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டு மாலை 8.30 மணிக்கு தமிழர் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.

கேணல் கிட்டு உட்பட வங்கக் கடலில் காவியமான பத்து மாவீரர்கள் நினைவாக மேற்கு அவுத்திரேலியாவில் நடைபெற்ற மட்டைப்பந்து போட்டி.

மேற்படி நிகழ்வு அவுத்திரேலிய தமிழர் பேரவை மேற்கு அவுத்திரேலியா மற்றும் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மேற்கு அவுத்திரேலியா ஒழுங்குபடுத்தலில் Armstrong Park Huntingdale WA என்னும் இடத்தில் நடைபெற்றது.

30.01.2021 காலை 7.30க்கு ஈகைச் சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகள் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்தை தொடர்ந்து அணிகள் பிரிக்கப்பட்டு காலை 8.00மணிக்கு போட்டிகள் ஆரம்பமானது.

போட்டியில் நாயகன் அணி, மலரவன் அணி, தூயவன் அணி, நல்லவன் அணி வேலவன் அணி மற்றும் அமுதன் அணி ஆகிய ஆறு அணிகள் பங்குபற்றின.

மட்டைப்பந்து போட்டி மாலை 2.00மணிக்கு இனிதே நிறைவேறியது. இத்தொடரில் அமுதன் அணி வெற்றி கிண்ணத்தையும், இரண்டாவது வெற்றிக் கிண்ணத்தை தூயவன் அணியும் தட்டிச் சென்றன.

தொடருக்கான சிறந்த துடுப்பாட்ட வீரராக மோகன் அவர்களும் தொடருக்கான சிறந்த வீரராக சோபா அவர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள். இவர்கள் அனைவருக்குமான வெற்றிக் கிண்ணங்கள் 30.01.2021 அன்று மாலை மேற்கு அவுத்திரேலியாவில் இடம் பெற்ற தைத்திருநாள் நிகழ்வில் வழங்கப்பட்டது.

தமிழர் பெருவிழா தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற திருக்குறள் மனனப் போட்டி.

மேற்படி நிகழ்வு அவுத்திரேலிய தமிழர் பேரவை மேற்கு அவுத்திரேலியா மற்றும் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மேற்கு அவுத்திரேலியா ஒழுங்குபடுத்தலில் 6 Third Avenue, Rossmoyne, WA 6148 என்னும் முகவரியில் உள்ள இலங்கை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

கீழ்பிரிவு, மத்திய பிரிவு, மேல்பிரிவு போன்றவற்றுக்கான திருக்குறள் மனனப் போட்டி 29.01.2021 மாலை 5.30க்கு நடுவர்கள் முன்னிலையில் ஆரம்பித்து 7.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

இத்திருக்குறள் மனனப் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் 30.01.2021 அன்று மாலை மேற்கு அவுத்திரேலியாவில் நடைபெற்ற தைத்திருநாள் நிகழ்வில் வழங்கப்பட்டது.

தமிழர் பெருவிழா தைத்திருநாளை முன்னிட்டு நடைபெற்ற திருக்குறள் மனனப் போட்டி.