ஈழத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக நாவல் உலகில் புதிய பாதையை வகுத்த முன்னோடியான செ.கணேசலிங்கன் கடந்த சனிக்கிழமையன்று (04.12.2021) மறைந்தார். அவருக்கு வயது 93. இலங்கையின் ’தினகரன்’ நாளிதழில் 1950-ல் தனது முதல் சிறுகதையை எழுதிய அவர், தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் சமூக அவலங்களைத் தனது எழுத்துகளின் மூலம் பல்வேறு பரிமாணங்களில் தோலுரித்துக் காட்டியிருந்தார். யாழ்ப்பாணம் உரும்பிராய் கிராமத்தில் 1928 மார்ச்-9 அன்று பிறந்த செ.கணேசலிங்கன் அரசுப் பணியாற்றி ...
Read More »தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மொழியாய்! விழியாய்! வழியாய்! எங்கள் உயிராய்! உணர்வாய்! அறிவாய்! ஆற்றலாய்! மானமாய்! வீரமாய்! எங்கள் முகமாய்! முகவரியாய்! பெருமைமிகு அடையாளமாய்! பெரும்வீர வரலாறாய் இருப்பவன் இவன்! சுதந்திரக் காற்று! சுடரொளிக் கீற்று! புரட்சியின் பெரும் வெடிப்பு! தமிழ்த்தேசிய இனத்தின் உயிர் துடிப்பு! ஆண்டுப் பலவாய் அன்னைத் தமிழ் அருந்தவமிருந்து பெற்ற மகன்! புறநானூற்று வீரம் படைத்த மறவன்! மண்ணின் மானம் காக்க வீரர் ...
Read More »ஆஸ்திரேலியாவின் பிரபல ‘Spelling Bee’ ஆங்கில போட்டியில் வென்ற தமிழ்ச்சிறுமி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வயது 11.
Read More »நிலையின்மையின் தத்துவார்த்தத் தேடல்
பெர்சேபோலிஸ் மர்ஜான் சத்ரபி வின்டேஜ் புக்ஸ் விலை: ரூ.599 மர்ஜான் சத்ரபியின் புகழ்பெற்ற கிராபிக் நாவலான ‘பெர்சேபோலிஸ்’ வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகின்றன. அந்த நாவல் மையப்படுத்தியிருக்கும் காலகட்டமோ இன்றிலிருந்து நாற்பது ஆண்டுகள் முந்தையது. நாற்பது ஆண்டுகள் கழிந்தும் அந்நாவலில் பதிவாகியிருக்கும் நிகழ்வுகள் இன்றும் தன்மை மாறாமல் நிகழ்ந்துவருகின்றன. கருத்தியல் அதிகாரத்தின் விளைவுகள் எல்லாக் காலகட்டத்திலும் ஒரே தன்மையுடையதாகத்தான் இருக்கின்றன என்பதை அந்நாவல் உணர்த்துகிறது. ஈரானில், 1979-ல் இஸ்லாமியப் புரட்சி ...
Read More »புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம்
முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13) இலங்கையில் நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை லெட்சுமணன். முருகபூபதி இலங்கையில் நீர்கொழும்பூரில் தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்தா வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட போது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவர் 1972 இல் ‘கனவுகள் ஆயிரம்‘ என்ற சிறுகதை மூலமாக மல்லிகை இதழில் அறிமுகமானார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் 1974 இல் வெளியானது. இந்நூலுக்கு இலங்கை சாகித்திய விருது 1975 இல் ...
Read More »வல்லிக்கண்ணன்: இலக்கிய ஊழியன்
நான் இறந்தால் என்னைப் பற்றிப் பத்திரிகைகள் எழுதுமா என்பது கேள்வி. தமிழ்நாடு எழுத்தாளர்களுக்கு அளிக்கும் கெளரவம் அத்தகைய சந்தேகத்தை எழுப்புகிறது… பத்திரிகைகளாவது ஒருநாள் எழுதும்… எழுதாமலும் போகும். ஆனால், நண்பர்கள் என்று சில பிறவிகள் இருக்கிறார்களே, அவர்களைப் பற்றி நினைத்துவிட்டால் எனக்கு சாகக்கூட பயமாயிருக்கிறது.’ நையாண்டி பாரதி என்ற புனைபெயரில் ‘கிராம ஊழியன்’ இதழில் 1944-ல் வல்லிக்கண்ணன் எழுதிய கட்டுரை இப்படித்தான் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது ...
Read More »பிரபஞ்சன்: காலம் கலை கலைஞன்!
பிரபஞ்சனின் வாசிப்பும் எழுத்தும் இறுதிவரை சற்றும் சோராதது. நூல்களை அறிமுகப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு தமிழ்ச் சூழலில் மிகவும் முக்கியமானது. மக்கள் டி.வி.யில் பணிபுரிந்த காலத்திலும் தினசரி காலை ஒளிபரப்பில் புத்தகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார். நூல் வெளியீட்டு விழாக்களுக்கு அதிகம் அழைக்கப்பட்டவரும் அவராகவே இருக்கக்கூடும். பக்க மற்றும் நேர வரையறைக்கேற்ப, சுருக்கமாகவும் விஸ்தாரமாகவும் புத்தகத்தை அவரால் அறிமுகப்படுத்த முடிந்தது. அர்ப்பணிப்புமிக்க இந்த நெடும் பயணத்தில், அவர் எண்ணற்ற நூல்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியபடி ...
Read More »ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் அமைக்கப்பட்ட நாள்: ஏப்ரல் 18, 1912
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் தலைநகரமான மெல்போர்ன் 1912-ஆம் ஆண்டு இதே நாளில் அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். 2006-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 3.8 மில்லியன் ஆகும்.
Read More »அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண்!
பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட நியுஸ் சவுத்வெல் (NSW) மாநில பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் சிந்துஜா சுரேஷ்குமார். கிரிக்கெட் மாத்திரமன்றிப் பல விளையாட்டுகளில் விருதுகளை பெற்றுள்ளார். இவ் வருடம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். பல விளையாட்டுகளில் பங்குபற்றுவதால் நேரத்தை முகாமை செய்யும் முகமாக தமது சுய கற்றலை புகையிரதவண்டிலும் மகிழுர்திலும் பயணிக்ககும் போது மேற்கொள்கின்றார். தனது தம்பி விளையாடும் போது பந்து எடுத்துக் கொடுத்து உதவி செய்த போது ...
Read More »உலகின் தலைசிறந்த ஆசிரியராக அவுஸ்ரேலிய தமிழ் பெண்!
உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழச்சியான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகி உலகத் தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக 179 நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளின்படி ஒரு மில்லியன் அமெரிக்க டொடலர் பரிசுத் தொகையானது யசோதைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவரது மாணவர்களுக்கு ‘MS Selva’ என இவர் நன்கு அறியப்படுவதாக சர்வதேச ஊடகமொன்றில் கூறப்பட்டுள்ளது.
Read More »