அவுஸ்திரேலியாவில் குடியேறுவதில் மேலும் சிக்கல் நிலை!

அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான Skilled Migration விசாவின் points system இல் மாற்றம் ஏற்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Skilled Migration விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் புள்ளிகள் points system ஊடாக கணக்கிடப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இதன்மூலம் 60 புள்ளிகள் பெற்றால் மட்டுமே குறிப்பிட்ட நபர் ஒருவர் பல துறைகளில் Skilled Migration ஊடாக அவுஸ்திரேலியாவில் குடியேற முடியும்.

இந்த நிலையில் இம்முறைமையானது எதிர்வரும் ஜுலை 1 ஆம் திகதியிலிருந்து இது 65 புள்ளிகளாக உயர்த்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விண்ணப்பித்தவர்கள் இம்மாற்றத்தினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதேவேளை ஜுலை 1ம் திகதியிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் 65 புள்ளிகளைப் பெறுவதற்கு தகுதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு வெட்டுப் புள்ளி அதிகரிப்பானது அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களை வெகுவாகப் பாதிக்குமென விசனம் வெளியிடப்பட்டுள்ளது.