செய்திமுரசு

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்லும் அவுஸ்ரேலிய பிரஜை!

வெளிநாட்டு பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுடன் இணைந்து இவர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு பாத யாத்திரையில் இணைந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் டிகிங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர் இரண்டாவது முறையாக இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்வற்காக இலங்கை வந்ததாக கூறியுள்ளார். இலங்கையின் கலாச்சாரம் குறித்து ஆய்வு நடத்தும் நோக்கிலேயே தான் இலங்கை வந்து இந்த பாத யாத்திரையில் இணைந்து கொண்டதாகவும் அவர் ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் பேட்மிண்டன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசு

இந்தோனேஷிய மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் வாகை சூடிய இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். இந்தோனேஷிய மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் வாகை சூடிய இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார். சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன், அவுஸ்ரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ...

Read More »

மூத்த பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டு – மெல்போர்ன் நீதிமன்றில் ஆஜர்

வாடிகனின் மூத்த பாதிரியார் கார்டினல் ஜார்ஜ் பெல் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு  நீதிமன்றில்  நடக்க உள்ள விசாரணையில் பங்கேற்க அவர் நேரில் செல்கிறார். வாடிகனை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது உயர்ந்த அதிகார மையம், கார்டினல் ஜார்ஜ் பெல் ஆவார். பாதிரியாரான இவர்தான், வாடிகன் பொருளாளர். 76 வயதான ஜார்ஜ் பெல் மீது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். இது தொடர்பாக அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண உயர்   நீதிமன்ற அதிகாரி பேட்டன் கூறுகையில், “கார்டினல் ...

Read More »

6 மாதம் தடை: அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

கிரிக்கெட் வாரியத்துடன் ஊதிய ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காவிடில் 6 மாதம் தடைவிதிக்கப்படும் என்று அவுஸ்ரேலிய லியா கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்திற்கும் இடையே ஊதியம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. நாங்கள் கேட்கும் ஊதியம் கிடைக்கும் வரை போராடுவோம். ஆஷஸ் தொடரைக்கூட புறக்கணிக்கலாம் என்று துணை கப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் வரும் 30-ந்திகதியுடன் முடிவடைகிறது. அதன்பின் 1-ந்திகதியில் இருந்து புதிய ஒப்பந்தம் போடப்பட வேண்டும். வீரர்கள் ஒப்பந்தத்திற்கு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வேகமாக வளரும் இந்துமதம்!

அவுஸ்ரேலியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்து மதத்தை பின்பற்றுவோர்கள் 4ஆம் இடத்தைப் பிடித்ததோடு, வேகமாக வளர்த்துவரும் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர். 2017ஆம் ஆண்டின் கணக்காய்வின்படி, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்து மதம், அவுஸ்ரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மதங்களின் பட்டியலைலில் இடம்பிடித்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரைக்குமான கணக்கெடுப்பின் படி பார்க்கும்போது, இந்து மதம் கிட்டத்தட்ட 500 விழுக்காடு வேகமாக வளர்ந்துள்ளது. அவுஸ்ரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு லட்சத்து 29,900 பேர் இந்துக்களாக உள்ளனர். இவர்களில் தமிழர்களும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களின் பட்டியலில் சீனா முதலிடம்

அவுஸ்ரேலியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் கடந்த 2016ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 2.44 கோடி, இதில் 26 சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என அவுஸ்திரேலிய புள்ளிவிபரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் குடியேறியவர்களில் 1.91 லட்சம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும், 1.63 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 180 நாடுகளை சேர்ந்த 13 லட்சம் பேர் அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More »

இறக்கும் தருவாயில் இருந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தாய்

பிறந்து 32 நாட்களில் உயிரிழந்த குழந்தை, அசைவுடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை குழந்தையின் தாய் வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் Catherine Hughes. இவருக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. Riley என பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறந்தவுடனேயே கிருமி தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து இருமல் வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள மிஷினில் குழந்தையை வைத்து மருத்துவர்கள் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும், Riley உயிரிழந்து விடுவான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தனது குழந்தை கை, கால்களை அசைக்கும் ...

Read More »

குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே பேசி அசத்தியுள்ளார் பெண் அரசியல்வாதி. பெண்கள் குழந்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டியே வருகின்றனர். ஆனால் அவுஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் செயல் இதற்கு மாறாக அமைந்துள்ளது. ஜூன் 22ம் திகதி அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வாட்டர்ஸ் தன்னுடைய 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சபாநாயகர் வாட்டர்ஸை பேச அழைக்க சிறிதும் பதற்றமோ தயக்கமோ இல்லாமல் எழுந்த அவர் குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்து ...

Read More »

அவுஸ்ரேலியாவில் எத்தனை பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர்?

கடந்தவருடம் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளை, சென்சஸ் திணைக்களம் வெளியிட ஆரம்பித்துள்ளது. இதன்படி அவுஸ்ரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 73,161 என சென்சஸ் திணைக்கள தரவுகள் கூறுகின்றன. கடந்த 2011ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50,151ஆக காணப்பட்ட அதேநேரம் 2006ம் ஆண்டு 32,704 ஆக காணப்பட்டது. இதேவேளை அவுஸ்ரேலியாவில் ஆங்கிலம் உட்பட வீட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கடந்த 2011 இலிருந்து சுமார் 1.3 மில்லியன் பேர், புதிதாக அவுஸ்ரேலியாவில் ...

Read More »

குடியுரிமை விண்ணப்பங்கள் புதிய சட்டத்தின்படியே பரிசீலிக்கப்படும்!

அவுஸ்ரேலிய Citizenship-குடியுரிமைச் சட்டத்தைக் கடினமாக்கும் முனைப்பில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில், ஏப்ரல் 19ம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அனைத்தும், புதிய சட்டத்தின் கீழேயே பரிசீலிக்கப்படுமென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு முன்வைத்துள்ள குடியுரிமை தொடர்பான புதிய சட்ட முன்வடிவு இன்னமும் சட்டமாக்கப்படாத நிலையில், குடிவரவுத் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது. குடிவரவுத் திணைக்களம்வசம் தற்போது 81 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாத நிலையில் இருக்கும் அதேநேரம் தொடர்ந்தும் பலர் விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப்பின்னணியில் குடியுரிமை விண்ணப்பம் தொடர்பில் அழைப்பு மேற்கொள்பவர்களிடம், ஏப்ரல் 19ம் ...

Read More »