அவுஸ்ரேலியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, இந்து மதத்தை பின்பற்றுவோர்கள் 4ஆம் இடத்தைப் பிடித்ததோடு, வேகமாக வளர்த்துவரும் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர்.
2017ஆம் ஆண்டின் கணக்காய்வின்படி, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்து மதம், அவுஸ்ரேலியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் மதங்களின் பட்டியலைலில் இடம்பிடித்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கி 2017ஆம் ஆண்டு வரைக்குமான கணக்கெடுப்பின் படி பார்க்கும்போது, இந்து மதம் கிட்டத்தட்ட 500 விழுக்காடு வேகமாக வளர்ந்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு லட்சத்து 29,900 பேர் இந்துக்களாக உள்ளனர். இவர்களில் தமிழர்களும் இங்கு கணிசமாக வாழ்கின்றனர்.
அவுஸ்ரேலிய மக்களில் 52 விழுக்காட்டினர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி முதலிடத்தில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து 2.6 விழுக்காட்டுடன் இஸ்லாமிய சமயத்தினர் இரண்டாம் இடத்திலும், 2.5 விழுக்காடு மக்களைக் கொண்ட புத்த சமயத்தினர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 1.9 விழுக்காட்டுடன் இந்து மதம் 4ஆவது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்து மதம் 4 வது இடத்தில் இருந்தாலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்து மதத்தின் வளர்ச்சி 60 விழுக்காடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் இருந்து குடியேறிய இந்தியர்கள், அங்கு தங்களுக்கு வழிபாட்டு தலங்களையும் கட்டி, திருவிழாக்களையும் நடத்தி வருவதோடு இந்துகளின் பாரம்பரியத்தையும் கடைபிடித்து வருகின்றனர்.