வெளிநாட்டு பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுடன் இணைந்து இவர் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு பாத யாத்திரையில் இணைந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் டிகிங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர் இரண்டாவது முறையாக இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்வற்காக இலங்கை வந்ததாக கூறியுள்ளார்.
இலங்கையின் கலாச்சாரம் குறித்து ஆய்வு நடத்தும் நோக்கிலேயே தான் இலங்கை வந்து இந்த பாத யாத்திரையில் இணைந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கலாச்சாரம் உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காத விசேடமான கலாச்சாரம் எனவும் அவுஸ்ரேலிய பிரஜை தெரிவித்துள்ளர்.
Eelamurasu Australia Online News Portal