அவுஸ்ரேலியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் கடந்த 2016ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 2.44 கோடி, இதில் 26 சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என அவுஸ்திரேலிய புள்ளிவிபரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் குடியேறியவர்களில் 1.91 லட்சம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும், 1.63 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் 180 நாடுகளை சேர்ந்த 13 லட்சம் பேர் அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal