நுட்பமுரசு

மாடல் ஒப்போ A57….!

கமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் ஒப்போ நிறுவனம் தனது அடுத்த மாடலான ஒப்போ A57 -ஐ களமிறக்கியுள்ளது. வரும் டிசம்பர் 12- ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 16,000 இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. ஒப்போ A57 அம்சங்கள் சில…. * கோல்டன் ரோஸ் மற்றும் கோல்டன் கலரில் இந்த புதிய மாடல் வெளிவரவுள்ளது. * 2900மி.ஆம்பியர் திறனுடைய பேட்டரியில் இயக்கப்படுகிறது. * முன்புற கேமிரா 16-மெகாபிக்சல் திறனுடனும், பின்புற கேமிரா 13-மெகாபிக்சல் திறனுடனும் செயல்படுகிறது. ...

Read More »

ஈபிள் டவரின் 14 படிக்கட்டுகள் ரூ. 3.8 கோடிக்கு ஏலம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலகப் புகழ் பெற்ற ‘இரும்பு பெண்’ என அழைக்கப்படும் ‘ஈபிள் டவர்’ கட்டுமானம் 1887ல் துவங்கப்பட்டு 1889ல் முடிக்கப்பட்டது. முழுவதும் இரும்பினால் கட்டப்பட்ட இதன் ஒட்டுமொத்த உயரம் 324 மீட்டர்கள் ஆகும். 1983ல் ‘லிப்ட்’ வசதி செய்யப்பட்டதால், இரும்பிலான படிக்கட்டுகள் 24 பகுதிகளாக வெட்டி எடுக்கப்பட்டு பாரிசில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அவை 1983-ஆம் ஆண்டில் இருந்து ஏலம் விடப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ஏலத்தில் இதன் 14 இரும்பு படிக்கட்டுகள் ரூ. 3.80 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தை ...

Read More »

செவ்வாய் கிரகத்தில் புதிய நீர்த்தேக்கம் கண்டுபிடிப்பு

அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிரகத்தில் தற்போது மிகப்பெரிய நீர்த்தேக்கம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள், 2030-ல் செவ்வாய் கிரகத்தில், வசிக்கலாம் என அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா’ அறிவித்திருந்தது. அண்மையில் நாசா செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி சோதனை செய்தது. விண்கலம் நடத்திய ஆய்வின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ அனைத்து ...

Read More »

மிகவும் குட்டியான செயற்கைக்கோள் விண்மீன்

பால்வெளியில் மிகவும் குட்டியான செயற்கைகோள் விண்மீன் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சிறிய செயற்கைகோள் விண்மீன் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் சிறியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விர்கோ என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளானது புதிய விண்மீனின் திசையில் அமைந்துள்ளது. ஜப்பானில் உள்ள டோஹோகு பல்கலைக் கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் இந்த விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இதுவரை 50 செயற்கைக்கோள் விண்மீன் திரள்கள் பால்வெளிக்கு செல்லும் திசையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 40 விண்மீன்கள் சிறிய நெட்டுருளை வடிவான வகையை சேர்ந்தவை ...

Read More »

போலி கூகுள் இணையதளம்..எச்சரிக்கை

கூகுள் இணையதளம் போன்ற போலி இணையதளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இணைய தேடுபொறி வசதியை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான கூகுள் பெயரில், அதேபோன்றதொரு போலி இணையதளம் இயங்குவதாக ’தி நெக்ஸ்ட் வெப்’ (The Next Web) எனும் இணையதளம் கண்டறிந்துள்ளது. கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்தில் தோன்றும் Google.com என்றில்லாமல், போலி இணையதளத்தில் முதல் எழுத்தான ‘G’ என்ற எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதையும் தி நெக்ஸ்ட் வெப் அடையாளம் கண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கையுடன் வெளியான போலி ...

Read More »

நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை பரப்பும் காற்று மாசு

நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை காற்று மாசு பரப்புவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.காற்று மாசுபடுவதன் மூலம் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக காற்றில் கார்பன்டை ஆக்சைடு வாயு அதிகமாக கலப்பதால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்று மாசுபடுவதன் மூலம் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பரவுவது ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனா தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு பெருமளவில் உள்ளது. எனவே அங்கு வாழும் மனிதர்கள், விலங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ. மற்றும் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட காற்று போன்றவைகள் மீது ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ...

Read More »

ப்ருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி

அணுஆயுத திறன் கொண்ட ப்ருத்வி 2 ஏவுகணையை இந்தியா, வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது . கண்டம் விட்டு கண்டம் தாவும் ப்ருத்வி 2 ஏவுகணை, இன்று காலை 9.40 மணியளவில் ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்திருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இன்று சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை 350 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. ப்ருத்வி 2 ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான போர் சாதனங்களை சுமந்து செல்லும் ...

Read More »

துளியும் சத்தமில்லாத லாரி!

அமெரிக்காவின் டெஸ்லா முதல் ஜெர்மனியின் டெய்ம்லர் வரை, மின்சார கார் தயாரிக்கும் பல நிறுவனங்கள், மின்சார லாரிகளையும் விரைவில் சாலைக்கு கொண்டுவரும் மும்முரத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் சார்ஜ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம், வித்தியாசமான மின்சார சரக்கு வாகனமொன்றை அண்மையில் அறிவித்துள்ளது. இதை ஏன், பார்ப்பதற்கு பெட்டி போல வடிவமைத்தனர் என்பது பலருக்கு புதிராகவே உள்ளது. என்றாலும், இந்த வடிவமைப்புக்கு பின்னால், சில முக்கியமான தொழில்நுட்ப புதுமைகள் இருப்பதாக மட்டும், இப்போதைக்கு சார்ஜ் விளக்கம் அளித்திருக்கிறது. இலகுரக உலோகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள சார்ஜ் மின் ...

Read More »

சீனாவின் ஷென்ஸோ 11 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

சீனா அனுப்பிவைத்த ‘ஷென்ஸோ 11’ விண்கலம் ஒருமாதகால விண்வெளி ஆய்வுக்கு பின்னர் மன்கோலியா நாட்டில் நேற்று (18)  பத்திரமாக தரையிறங்கியது. விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். இந்நிலையில், ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ ...

Read More »

ஜீப்ரானிக்ஸின் போர்டபில் இன்டெக்ஷன் ஸ்பீக்கர்

மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் புதிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ‘ஆம்ப்ளிஃபை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இது ஒரு வயர்லெஸ் ஒலிப்பெருக்கி இன்டெக்ஷன் ஸ்பீக்கராகும். 330 கிராம்கள் மட்டுமே எடை கொண்ட இந்த போர்டெபில் இன்டெக்ஷன் ஸ்பீக்கர், ஒலியை அதிகரிப்பதற்கு இன்டெக்ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, மொபைல் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு இடையே ப்ளூடூத் அல்லது Wi-fi இணைப்பு வேண்டும் என்ற அவசியம் இன்றி, இந்த இன்டெக்ஷன் ஸ்பீக்கர் மிகவும் எளிதாக இசையை வழங்குகிறது. ஆன் செய்துவிட்டு இந்த ஸ்பீக்கரின் மொபைல் ஹோல்டர் மீது மொபைல் பேசியை ...

Read More »