கமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் ஒப்போ நிறுவனம் தனது அடுத்த மாடலான ஒப்போ A57 -ஐ களமிறக்கியுள்ளது. வரும் டிசம்பர் 12- ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 16,000 இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
ஒப்போ A57 அம்சங்கள் சில….
* கோல்டன் ரோஸ் மற்றும் கோல்டன் கலரில் இந்த புதிய மாடல் வெளிவரவுள்ளது.
* 2900மி.ஆம்பியர் திறனுடைய பேட்டரியில் இயக்கப்படுகிறது.
* முன்புற கேமிரா 16-மெகாபிக்சல் திறனுடனும், பின்புற கேமிரா 13-மெகாபிக்சல் திறனுடனும் செயல்படுகிறது.
* 5.2 அங்குல வடிவத்தில் முழு ஹச்டி தரத்துடன் 720 x 1280 பிக்சல் ரேசல்யூஷன் உடைய தொடுதிரையினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
* 1.4GHz வேகத்தில் செயற்படக்கூடிய குவால்காம் ஸ்னாப்ட்ரகன் 435 பிராசசர் மற்றும் 3ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமெரியுடன் ஸ்மார்ட்டாக வெளிவரவுள்ளது.
* ஒப்போ A57 எடை 147 கிராம் ஆகும். ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தில் செயல்படுகிறது.
* 4G தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ அழைப்பிற்கான கிளாரிட்டி நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ளன.
* இந்த மாடல் ஸ்மார்ட்போனில் 4ஜி தொழில்நுட்பம், எல்டிஈ, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத் v4.1, வைஃபை, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி, மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை நேர்த்தியான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.