மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஜீப்ரானிக்ஸ் புதிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ‘ஆம்ப்ளிஃபை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இது ஒரு வயர்லெஸ் ஒலிப்பெருக்கி இன்டெக்ஷன் ஸ்பீக்கராகும்.
330 கிராம்கள் மட்டுமே எடை கொண்ட இந்த போர்டெபில் இன்டெக்ஷன் ஸ்பீக்கர், ஒலியை அதிகரிப்பதற்கு இன்டெக்ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, மொபைல் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு இடையே ப்ளூடூத் அல்லது Wi-fi இணைப்பு வேண்டும் என்ற அவசியம் இன்றி, இந்த இன்டெக்ஷன் ஸ்பீக்கர் மிகவும் எளிதாக இசையை வழங்குகிறது. ஆன் செய்துவிட்டு இந்த ஸ்பீக்கரின் மொபைல் ஹோல்டர் மீது மொபைல் பேசியை வைக்க வேண்டும். இது ஒலியை பலமடங்கு அதிகரித்து இசையைக் கேட்டு மகிழும் அனுபவத்தை அதிகரித்திடும். இந்த பொருளை அனைத்து வகையான ஸ்மார்ட் ஃபோன்களுடனும் பயன்படுத்த முடியும்.
இது குறித்த பேசியுள்ள ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு. பிரதீப் ஜோஷி “இன்றைய இசைப்பிரியர்கள் இசையைக் கேட்பதற்கு தற்போதுள்ள முறைகளைக் காட்டிலும் மேம்பட்ட முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை விரும்புகின்றனர். அவர்கள் வயர் இணைப்புள்ள ஸ்பீக்கர்களை வெறுக்கின்றனர் மேலும் ப்ளூடூத் அல்லது Wi-fi இணைப்பு ஆகியவை இல்லாத ஒரு முறையில் இணைக்கப்பட வேண்டும் என்கின்ற தீர்வினை எதிர்பார்க்கின்றனர். இதுதான் இந்த பிரத்யேகமான ட்ராப் அண்டு ப்ளே வளர்லெஸ் ஸ்பீக்கரான ‘ஆம்ப்ளிஃபையை’ அறிமுகப்படுத்துவதற்கு எங்களை ஊக்கப்படுத்தியது” என்று தெரிவித்தார்.
இந்த ஸ்பீக்கர் ரப்பர் வெளிப்பகுதியைக் கொண்டு தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் அடிப்பகுதியிலும் ரப்பரால் ஆன பிடிப்பானைக் கொண்டுள்ளது. இது 1000 mAh ஆற்றலைக் கொண்ட ஒரு லி-இயான் பேட்டரியையும் கொண்டுள்ளது. இன்டெக்ஷன் முறை மற்றும் ஆக்ஸ் முறையில் இது ஏறக்குறைய 6 முதல் 8 மணிநேரங்கள் வரை இயங்கும்.
‘ஆம்ப்ளிஃபை’ ஸ்பீக்கரின் விலை ரூ.999. ஆன்லைனிலும் மற்றும் இதர பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் கிடைக்கிறது.