ப்ருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி

அணுஆயுத திறன் கொண்ட ப்ருத்வி 2 ஏவுகணையை இந்தியா, வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது .

கண்டம் விட்டு கண்டம் தாவும் ப்ருத்வி 2 ஏவுகணை, இன்று காலை 9.40 மணியளவில் ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுகணை தளத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்திருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

இன்று சோதனை செய்யப்பட்டுள்ள ஏவுகணை 350 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. ப்ருத்வி 2 ஏவுகணை 500 கிலோ முதல் 1000 கிலோ வரையிலான போர் சாதனங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

இரட்டை என்ஜின்களை கொண்ட இந்த ஏவுகணை, திரவ உந்துசக்தியால் இயங்கக் கூடியது. இதற்கு முன் இந்த ஆண்டின் பிப்ரவரி 16 ம் தேதி ப்ருத்வி 2 ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.