கூகுள் இணையதளம் போன்ற போலி இணையதளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இணைய தேடுபொறி வசதியை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான கூகுள் பெயரில், அதேபோன்றதொரு போலி இணையதளம் இயங்குவதாக ’தி நெக்ஸ்ட் வெப்’ (The Next Web) எனும் இணையதளம் கண்டறிந்துள்ளது.
கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்தில் தோன்றும் Google.com என்றில்லாமல், போலி இணையதளத்தில் முதல் எழுத்தான ‘G’ என்ற எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதையும் தி நெக்ஸ்ட் வெப் அடையாளம் கண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கையுடன் வெளியான போலி கூகுள் இணையத்தின் முகப்புப் பக்கத்தில் தற்போது, நீங்கள் சாதித்துவிட்டீர்கள் ட்ரம்ப் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த இணையதளத்தினை பயன்படுத்துவர்களின் தகவல்கள் திருடுபோவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கூகுள் தளத்தின் முகப்புப் பக்கத்துக்குச் செல்லும் போது அதன் முதல் எழுத்தான ‘G’-யின் அளவைக் கவனித்த பின்னர் இணைய வெளியில் உலவுங்கள்.