பால்வெளியில் மிகவும் குட்டியான செயற்கைகோள் விண்மீன் ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சிறிய செயற்கைகோள் விண்மீன் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே இது தான் சிறியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விர்கோ என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளானது புதிய விண்மீனின் திசையில் அமைந்துள்ளது.
ஜப்பானில் உள்ள டோஹோகு பல்கலைக் கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் இந்த விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது இதுவரை 50 செயற்கைக்கோள் விண்மீன் திரள்கள் பால்வெளிக்கு செல்லும் திசையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் 40 விண்மீன்கள் சிறிய நெட்டுருளை வடிவான வகையை சேர்ந்தவை ஆகும். மேலும் மங்கலான மற்றும் விரவி காணப்படுவதாகும்.
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய விண்மீன் திரள்களில் பெரும்பாலானவை மங்கலானவை. அவற்றின் ஒளிப்பிறக்க அளவு மைனஸ் 8 ஆக இருந்தது.
ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள விண்மீன் செயற்கைகோள் மைனஸ் 0.8 ஒளிப்பிறக்கம் கொண்டவை என்று விர்கோவை கண்டறிந்த ஆய்வாளர் ஹோம்மா என்பவர் தெரிவித்தார்.