குமரன்

அவுஸ்ரேலியாவில் இன்னமும் உயர்ந்துகொண்டிருக்கும் வெள்ளநீர்

அவுஸ்ரேலியாவில் வெள்ளநீர் இன்னமும் உயர்ந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர், மின்சாரம் போன்ற சேவைகள் தடைபட்டிருக்கின்றன.அவற்றை மீண்டும் செயல்படுத்த அவசரநிலை ஊழியர்கள் பாடுபட்டுவருகின்றனர். டெபி சூறாவளியில் குறைந்தது மூவர் மாண்டனர். நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லந்து மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையில் சிலரைக் காணவில்லை என்றும் புகார் கொடுக்கப்பட்டது. அவை பேரிடர் பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். மழை தணிந்தாலும், சில நகர்ப்பகுதிகளில் வெள்ளத்துக்கான எச்சரிக்கை நீக்கப்படவில்லை. சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளால் சுமார் 770 மில்லியன் டாலர் பெரும்பாலான ...

Read More »

விவசாயிகளை காப்பாற்றி தேசத்தின் வயிற்றை காப்பாற்றுங்கள் – வைரமுத்து

வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினர் அவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் கூட சிலதினங்களுக்கு முன்னர் டில்லி சென்று விவசாயிகளை சந்தித்து பேசினர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வரும் வேளையில், கவிஞர் வைரமுத்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்விபரம் வருமாறு.. ‛‛தமிழக விவசாயிகள், ஜந்தர் மந்தர் வெயிலில் ...

Read More »

மேசையை தொடுதிரையாக்கும் விளக்கு

தட்டையான எந்தப் பரப்பையும் தொடுதிரையாக மாற்ற வேண்டுமா? வந்து விட்டது, ‘லேம்பிக்ஸ்.’ இதை ‘ஸ்மார்ட் லேம்ப்’ என்று ஊடகங்கள் அழைத்தாலும், உண்மையில் இது ஒரு ‘புரஜக்டர்’ வகையைச் சேர்ந்தது தான். கணினி அல்லது ஸ்மார்ட்போனை, ‘வைபை’ மூலம் லேப்பிக்ஸ் சாதனத்தை இணைத்தால் போதும். நீங்கள் விரும்பும் சம தளத்தில் கணினி திரை அல்லது மொபைல் திரையை, ‘புரஜக்ட்’ செய்யும். இது சற்று கூடுதல்  பரப்பளவைத் தருவதோடு, சுதந்திரத்தையும் தருகிறது. பார்க்க சாதாரண மேசை விளக்கு போல இருக்கும் லேம்பிக்சுக்குள், ‘ராஸ்பெர்ரி பை’ கணினியும், 8 ...

Read More »

யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்தது

யாழ் பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் துணைவேந்தரின் பொதுமன்னிப்பினை அடுத்து முடிவிற்கு வந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்றையதினம் ஒன்றுகூடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடச் சபையினர் மாணவர்கள் மீதான இடைக்காலத் தடையை இரத்துச் செய்து அவர்கள் கற்றல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கவேண்டும் என துணைவரிற்கு சிபாரிசு செய்வதாகவும் சமகாலத்தில் முழுமையான விசாரணைகளை நடாத்திக்கொள்ளுமாறும் ஊடக அறிக்கை வெளியிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதனையடுத்து நேற்று ...

Read More »

அவுஸ்ரேலியா சூறாவளியால் பெண்கள் பலி

அவுஸ்ரேலியாவில், டெபி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மாண்ட இரண்டாவது பெண்ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லந்து மாநில எல்லையில் உள்ள மர்விலம்பாவுக்கருகே காணாமற்போன 64 வயது மாதின் சடலம் அது. அவரது வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வாகனத்திலிருந்த அவரது 74 வயது கணவர் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டது. அவ்வட்டாரத்தில் வெள்ள நீர் 3 மீட்டர் இருந்ததாக மாநில அவசரகாலச் சேவை அமைப்பு தெரிவித்தது. டெபி சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தின் அளவு ஒரு பில்லியன் அவுஸ்ரேலிய டாலரை எட்டலாம் என்று அவுஸ்ரேலியக் காப்பீட்டுக் கழகம் மதிப்பிட்டுள்ளது.

Read More »

சவேந்திராவை நீதிமன்றம் அழைப்பது கடினமென்கிறது நல்லாட்சி!

நல்லாட்சி அரசினாலும் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் மறுப்பு தெரிவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதப் பிரிவு தலைவரான சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைக்குறிப்பிட்டதாக மூத்த சட்டத்தரணியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எழிலன் உள்ளிட்ட 12 பேர் 58ம் படைப் பிரிவிடம் சரணடைந்திருந்தனர். பின்னர் அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு ...

Read More »

பொடி வடிவில் தடுப்பு மருந்து

உயிர் காக்கும் தடுப்பூசிகளை குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் வைத்திருக்காவிட்டால், அவை வீரியமிழந்துவிடும். ஆப்ரிக்கா போன்ற மின் வசதி, குளிர் பதன வசதி குறைந்த நாடுகளில், கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் மருத்துவ பணியாளர்களுக்கு இது பெரிய சவால். இந்த பிரச்னைக்கு புனேயிலுள்ள, ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ ஒரு புது தீர்வை கண்டறிந்துள்ளது. வயிற்றுப் போக்கை உண்டாக்கி, கவனிக்கா விட்டால் மரணத்தையே கூட ஏற்படுத்தும் ‘ரோட்டா வைர’சுக்கு எதிரான, பி.ஆர்.வி.- பி.வி., என்ற தடுப்பு மருந்தை, திரவ நிலையிலிருந்து உலர்ந்த பொடியாக மாற்றி வெற்றி ...

Read More »

இரவோடு இரவாக நடிகர்கள் கட்சி துவக்கம்!

ரஜினியை நேற்று சந்தித்த மலேஷிய பிரதமர், நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அரசியல் கட்சித் துவங்கினால், தான் முழு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து, நேற்று இரவோடு இரவாக, கமல், சரோஜா தேவி, பொன் வண்ணன், சரத்குமார், சிவகுமார், நாசர், விஷால், ராதாரவி, சுஹாசினி, மீனா, சிம்பு, சினேகா, கோவை சரளா, விவேக், வடிவேலு உட்பட பல நடிகர்கள் கூடி, ஆலோசனை நடத்தினர். கட்சியின் பெயர், சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாவித்ரி, பத்மினி ஆகிய பெயர்களின் சாயல் வரும் வகையில் அமைய வேண்டும் என ஆசைப்பட்டனர். ...

Read More »

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் உயர் பதவி!

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களைப் புரிந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் 28 ஆவது பொது உதவி அதிகாரியாக அவர் நேற்று பதவியைப் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றினார். இறுதிக்கட்டப் போரின்போது, இவரின்கீழ் இயங்கிய 58ஆவது டிவிசன் பல போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ...

Read More »

முதலாவது பூமி நேரம் நிகழ்ச்சி சிட்னியில் தொடங்கப்பட்ட நாள்: மார்ச். 31, 2007

வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு அவுஸ்ரேலியாவின் இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது எர்த் ஹவர் நிகழ்வு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் திகதி சிட்னியில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். ...

Read More »