நல்லாட்சி அரசினாலும் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றிற்கு அழைப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் மறுப்பு தெரிவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதப் பிரிவு தலைவரான சின்னத்துரை சசிதரன் எனப்படும் எழிலன் காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணைகளின் போது அவர் இதனைக்குறிப்பிட்டதாக மூத்த சட்டத்தரணியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எழிலன் உள்ளிட்ட 12 பேர் 58ம் படைப் பிரிவிடம் சரணடைந்திருந்தனர். பின்னர் அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை முல்லைதீவு நீதிமன்றினில் நடைபெற்றுவருகின்றது.
இந்த விசாணைகளின் நீதிமன்றில் சாட்சிமளித்திருந்த 58ம் படைப் பிரிவின் தற்போதைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் காலிங்க குணவர்தன இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் பற்றி தமக்கு தெரியாது எனவும் அப்போது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடயைமாற்றியிருந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.