போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் உயர் பதவி!

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களைப் புரிந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவ தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் 28 ஆவது பொது உதவி அதிகாரியாக அவர் நேற்று பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் இவர் சிறிலங்கா இராணுவத்தின் 53ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றினார்.

இறுதிக்கட்டப் போரின்போது, இவரின்கீழ் இயங்கிய 58ஆவது டிவிசன் பல போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைக்காக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுப்பது தொடர்பாக அடுத்த ஏப்ரல் 27ஆம் நாள் தீர்மானிக்கவுள்ள நிலையில், அவர் இந்தப் புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.