அவுஸ்ரேலியாவில், டெபி சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தில் மாண்ட இரண்டாவது பெண்ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குவீன்ஸ்லந்து மாநில எல்லையில் உள்ள மர்விலம்பாவுக்கருகே காணாமற்போன 64 வயது மாதின் சடலம் அது.
அவரது வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வாகனத்திலிருந்த அவரது 74 வயது கணவர் உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டது.
அவ்வட்டாரத்தில் வெள்ள நீர் 3 மீட்டர் இருந்ததாக மாநில அவசரகாலச் சேவை அமைப்பு தெரிவித்தது.
டெபி சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தின் அளவு ஒரு பில்லியன் அவுஸ்ரேலிய டாலரை எட்டலாம் என்று அவுஸ்ரேலியக் காப்பீட்டுக் கழகம் மதிப்பிட்டுள்ளது.