வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு அவுஸ்ரேலியாவின் இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது.
முதலாவது எர்த் ஹவர் நிகழ்வு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் திகதி சிட்னியில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்.
வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்வு அவுஸ்ரேலியாவின் இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது எர்த் ஹவர் நிகழ்வு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி சிட்னியில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓபரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.