யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு வந்தது

யாழ் பல்கலை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் துணைவேந்தரின் பொதுமன்னிப்பினை அடுத்து முடிவிற்கு வந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் ஒன்றுகூடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடச் சபையினர் மாணவர்கள் மீதான இடைக்காலத் தடையை இரத்துச் செய்து அவர்கள் கற்றல் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கவேண்டும் என துணைவரிற்கு சிபாரிசு செய்வதாகவும் சமகாலத்தில் முழுமையான விசாரணைகளை நடாத்திக்கொள்ளுமாறும் ஊடக அறிக்கை வெளியிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதனையடுத்து நேற்று (31) இரவு நிகழ்சம்பவங்களிற்கு தாங்கள் மன்னிப்புக் கோருவதாகவும் எனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறாது எனவும் தமக்கு பொது மன்னிப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுத்த நிலையில்  இன்றைய தினம்(01) காலையில் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட துணைவேந்தர் வகுப்புத்தடையினை இரத்து செய்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (3) வழமைபோல் விரிவுரைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

viber-image