அவுஸ்ரேலியாவில் வெள்ளநீர் இன்னமும் உயர்ந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர், மின்சாரம் போன்ற சேவைகள் தடைபட்டிருக்கின்றன.அவற்றை மீண்டும் செயல்படுத்த அவசரநிலை ஊழியர்கள் பாடுபட்டுவருகின்றனர்.
டெபி சூறாவளியில் குறைந்தது மூவர் மாண்டனர். நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லந்து மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையில் சிலரைக் காணவில்லை என்றும் புகார் கொடுக்கப்பட்டது.
அவை பேரிடர் பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
மழை தணிந்தாலும், சில நகர்ப்பகுதிகளில் வெள்ளத்துக்கான எச்சரிக்கை நீக்கப்படவில்லை.
சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளால் சுமார் 770 மில்லியன் டாலர் பெரும்பாலான இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.