வெள்ளிக்கிழமை 11-02-2022 மாலை 5.30 மணி தொடக்கம் சிட்னி SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கற் அணி பங்குபற்றுகின்ற போட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பு பற்றிய கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது. துடுப்பாட்டம் (கிரிக்கற்) எனும் விளையாட்டுக்கூடாக தமிழர் மீதான இனவழிப்பை மூடிமறைக்கும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலை வெளிப்படுத்தும் வண்ணம் பதாகைகளை தாங்கியவாறு இந்நிகழ்வு நடைபெற்றது. Don’t Let Sri Lankan Cricket Hide Tamil Genocide என்ற பதாகையுடன் என்ற கோசங்களும் எழுப்பப்பட்டன. Stop Stop – Genocide, Shame Shame ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கேணல் கிட்டு வெற்றிக் கிண்ணப் போட்டிகள் – 2022 – பேர்த்
வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 29 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்திய வெற்றிக்கிண்ண போட்டியில் கால்பந்தாட்டம், மட்டைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் உட்பட பல விளையாட்டுகள் 09/01/2022 அன்று சிறப்பாக இடம் பெற்றன. காலை 8:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் அவுஸ்திரேலிய தேசியக் கொடியை திரு. நந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை ...
Read More »தமிழினப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தியவர் பேராயர் டுட்டு
தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளி பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் பயணம் நிறைவடைந்தமையிட்டு வடக்கு-கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவெறி அடக்குமுறைக்கெதிராக 1970 களிலிருந்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் குரலாகவும், அம்மக்களோடு பயணித்து மக்களின் விடுதலைக்காக உழைத்து ‘வானவில் தேசமான’ தென் ஆபிரிக்காவை கட்டியெழுப்பிய தேசப்பிதாக்களில் ஒருவரான டுட்டுவின் மறைவு நிரப்பீடு செய்யப்படமுடியாதது. தனது பட்டறிவின் மூலம் அடக்கப்பட்ட ...
Read More »அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு
அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் உச்சத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 கோடியே 52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் குழந்தைகளையும் ...
Read More »ஆஷஸ் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா
ஆஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ந் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா ...
Read More »நல உதவிகளிலேயே வாழ நாங்கள் ஆஸ்திரேலியா வரவில்லை: ஈழத்தமிழ் அகதி
ஆஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர ஆஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த எங்களது குடும்பம் மீள்குடியமர ஆஸ்திரேலியாவில் எங்கள் அருகாமையில் வசித்தவர்கள் உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையான பொருட்களைப் பெற, உடைகளைப் பெற, வேலைகளைப் பெற உதவியிருக்கிறார்கள். எங்களுக்கு உணவுக்கூட அளித்திருக்கிறார்கள்,” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Read More »பிரபாகரன் இருந்தால் வட-கிழக்கை வழங்கிவிட்டு டொலர்களை தருமாறு அரசாங்கம் கோரியிருக்கும்!
பிரபாகரன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அரசாங்கம் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கையளித்துவிட்டு அதற்குப் பதிலாக டொலர்களை வழங்குமாறு கோரியிருக்கும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இரு அமெரிக்கர்களும் இணைந்துதான் நாட்டை நிர்வகிக்கின்றார்கள். மாறாக பிரதமரிடம் பெருமளவிற்கு அதிகாரங்கள் ...
Read More »மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு எவ்வாறு பணம் வந்தது !
மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு டொலர் எந்த அடிப்படையில் கிடைக்கப்பெற்றது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார். மத்திய வங்கியின் கையிருப்பு 3.1பில்லியன் டொலர்களாக உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார் அப்படியாயின் அந்த நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றவகையில் எமக்கு தெரியப்படுத்த அவர்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள் ஆனால் இந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்ற விடயத்தை மறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எதற்காக மறைக்கவேண்டும் என ...
Read More »கவிஞர் மு.முருகேஷுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது
தமிழகத்திற்கான யுவ புரஸ்கார் விருது பெறுபவரின் விவரங்கள் வேறு தேதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2021-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த கவிஞர் மு.முருகேஷுக்கு அவர் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’என்ற சிறுவர் இலக்கியத்திற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளுக்கான யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான யுவ புரஸ்கார் விருது பெறுபவரின் விவரங்கள் வேறு தேதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read More »ஆஸ்திரேலிய புலம்பெயர்வு திட்டத்தை ஆராயும் புலம்பெயர்வு நிலைக்குழு
பிப்ரவரி 2021: ஆஸ்திரேலியாவுக்கு பொருளாதார மட்டத்தில் முக்கிய பங்களிப்பைச் செலுத்தும் பட்டியலில் திறன்வாய்ந்த குடியேறிகள் முதன்மையானவர்களாக இருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக, ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் குடியேறிகள் திறன்வாய்ந்த புலம்பெயர்வு திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் சென்றிருக்கின்றனர். ஆஸ்திரேலியாவின் உழைப்புச்சக்தியில் ஏற்படும் இடைவெளியை நிரப்பும் இடத்தில் குடியேறிகல் இருக்கின்றனர். இந்த சூழலில், திறன்வாய்ந்த புலம்பெயர்வு திட்டம் தொடர்பான ஆராய்வை புலம்பெயர்வுக்கான கூட்டு நிலைக்குழு மேற்கொண்டுள்ளது. “திறன்வாய்ந்தவர்கள் புலம்பெயர்வது ஆஸ்திரேலியாவின் தற்போதைய தேவைகளையும் வருங்கால தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்கிறது என்பதை கருத்தில் கொள்ள ...
Read More »
Eelamurasu Australia Online News Portal