அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் உச்சத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 கோடியே 52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 67 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் குழந்தைகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. ஒரு வயது முதல் 18 வரை உள்ளவர்களை தற்போது கொரோனா வெகுவாக பாதித்து வருகிறது. கடந்த மாதத்தை விட இந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துவிட்டது.
கொரோனா வைரஸ்
கடந்த வாரம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது 61.1 சதவீதம் அதிகம் ஆகும். பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குவ