தமிழகத்திற்கான யுவ புரஸ்கார் விருது பெறுபவரின் விவரங்கள் வேறு தேதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு 2021-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் தமிழகத்தை சேர்ந்த கவிஞர் மு.முருகேஷுக்கு அவர் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’என்ற சிறுவர் இலக்கியத்திற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற மொழிகளுக்கான யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான யுவ புரஸ்கார் விருது பெறுபவரின் விவரங்கள் வேறு தேதியில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுகதை எழுத்தாளர் அம்பை சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal