ஆஸ்திரேலிய புலம்பெயர்வு திட்டத்தை ஆராயும் புலம்பெயர்வு நிலைக்குழு

பிப்ரவரி 2021: ஆஸ்திரேலியாவுக்கு பொருளாதார மட்டத்தில் முக்கிய பங்களிப்பைச் செலுத்தும் பட்டியலில் திறன்வாய்ந்த குடியேறிகள் முதன்மையானவர்களாக இருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக, ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் குடியேறிகள் திறன்வாய்ந்த புலம்பெயர்வு திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்குள் சென்றிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் உழைப்புச்சக்தியில் ஏற்படும் இடைவெளியை நிரப்பும் இடத்தில் குடியேறிகல் இருக்கின்றனர். இந்த சூழலில், திறன்வாய்ந்த புலம்பெயர்வு திட்டம் தொடர்பான ஆராய்வை புலம்பெயர்வுக்கான கூட்டு நிலைக்குழு மேற்கொண்டுள்ளது.
“திறன்வாய்ந்தவர்கள் புலம்பெயர்வது ஆஸ்திரேலியாவின் தற்போதைய தேவைகளையும் வருங்கால தேவைகளையும் எவ்வாறு பூர்த்தி செய்கிறது என்பதை கருத்தில் கொள்ள கொரோனா பெருந்தொற்று சூழல் வாய்ப்பு வழங்கியிருக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார் புலம்பெயர்வுக்கான கூட்டு நிலைக்குழுவின் தலைவரான ஜூலியன் லீசர்.