மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் அது பொலிஸ் பணிகளை அரசியல் மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் மொழிப்பிரச்சினை காரணமாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் முறுகல் நிலைமைகளுமே பல்வேறு வன்முறைகளுக்கு கடந்த காலங்களில் வித்திட்டிருந்தன என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அரசியலையும் தமிழ் மக்களையும் கையறு நிலைமைக்குள் தள்ளியுள்ளது. தனி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை பலத்தின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள அவர் பெரும்பான்மை இன ...
Read More »கொட்டுமுரசு
கோத்தாபயவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 2020 நாடாளுமன்ற தேர்தல் !
பி.கே.பாலசந்திரன் – முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார். மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளவும் கொண்டு வருவதற்கு 19 ஆவது திருத்தத்தை முற்றாகக் கைவிடுவதில் அல்லது அதில் பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பு ...
Read More »‘கஜபா’க்களின் காலம்!
இந்தியா புதிதாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி (கூட்டுப்படைகளின் தளபதி) என்ற பதவியை கடந்த ஜனவரி 1ஆம் திகதி உருவாக்கியிருக்கிறது. இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முதலாவது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் பாரிய போர்களை நடத்தியிருந்த போதிலும், கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்குப் பின்னரே, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச அளவில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிகள் மட்டத்தில் நடந்து வந்த சந்திப்புகள், கூட்டங்களில், பெரும்பாலும் இந்தியா ...
Read More »சிதறுமா தமிழ் வாக்குகள் ?
பொதுத்தேர்தலை நோக்கி நாடு நகரத் தொடங்கியுள்ள சூழலில் தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்கான தயார்படுத்தல்களில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இந்தப் பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்வதை தடுக்கும் வகையில்- தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முன்வர வேண்டும் என்று, அழைப்பு விடுத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது பங்காளிக் கட்சிகளுடன் ஏற்கனவே ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களைத் தொடங்கி விட்டது. புதிய கட்சிகளை உள்வாங்குவதற்கான எந்தப் பேச்சுக்களையும் முன்னெடுக்காமலேயே, பங்காளிகளுடன் ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதில் இருந்தே, கூட்டமைப்பு ஏனைய தமிழ்க் ...
Read More »”எனது பணி மக்களை அடியொற்றி இருக்கும்”!-ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
நான் அதிகாரங்களை ஏதேச்சதிகாரமாக பயன்படுத்துவதற்காகவோ, அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதற்காகவோ ஆளுநர் பதவியைப் பெறவில்லை. மாகாண நிர்வாகத்துக்கான எல்லையை நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். எனது பணிகள் அனைத்தும் மக்களை அடியொற்றியதாக இருக்கையில், அதிகார துஷ்பிரயோகங்களோ வரம்பு மீறல்களோ இடம்பெறுவதற்கு சாத்தியமில்லை என்று வடமாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:-அரச நிர்வாகத்துறையில் நீண்ட அனுபவத்தினைக் கொண்ட நீங்கள் சேவையிலிருக்கும்போதே வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- அரசாங்க ...
Read More »2019 – சர்வதேச போக்குகள்!
2019ஆம் ஆண்டின் இறுதி நாளான மார்கழி 31ஆம் திகதி ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய அமெரிக்க தூதராலயம் ஈராக்கிய மக்களின் பலத்த தாக்குதலுக்குள்ளானது. 2003இல் அமெரிக்கா ஈராக்கினுள் புகுந்து 16 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அமெரிக்காவின் ஈராக்கிய கொள்கைக்கு பலத்த எதிர்ப்பு ஈராக்கில் இன்னும் இருப்பதை தாக்குதல் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. ஈராக்கிய அரசாங்கம் இரண்டு நாடுகளில் தங்கியுள்ளது. வேடிக்கை என்னவென்றால் அமெரிக்கா பரம வைரியாக கருதும் ஈரான் ஈராக்கினுள் செல்வாக்குடன் திகழுகிறது. ஒருபுறம் ஈராக்கை பணிய வைப்பதற்கு அமெரிக்காவின் பொருளாதார ...
Read More »பயங்கரவாதத்தின் பிடியில் சோமாலியா!
சோமாலியாவின் தலைநகர் மொகாதிஷுவில் 2019 டிசம்பர் 28 இடம்பெற்ற பெரிய ட்ரக் குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 79 பேர் கொல்லப்பட்டதுடன் 149 பேர் காயமடைந்தனர். இந்த கொடூரச்சம்பவம் அந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் புத்துயிர்ப்பு பெற்றிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. 2011 ஆம் ஆண்டில் சர்வதேச படைகளினால் மொகாதிஷுவில் இருந்து விரட்டப்பட்ட அல் – ஷாபாப் என்ற அல் – கயெடாவுடன் தொடர்புடைய பயங்கரவாத இயக்கமே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் பல தற்கொலைக்குணடுத் தாக்குதல்களை நடத்திய அந்த இயக்கம் சோமாலியாவின் சில பகுதிகளை ...
Read More »மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்குமா?
திருமலை மாணவர் ஐவர் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 13 படையினரும் குற்றமற்றவர்கள், குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லையென்ற கோதாவில் கடந்த 2019 ஜுலை மாதம் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. திருமலை பிரதான நீதவான் இத்தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு ஜுலையில் வழங்கியிருந்தார். பீனல் கோட்டின் 154 மற்றும் 153 ஆம் பிரிவுகளின் கீழ் இவ்வழக்கினை தொடர்ந்து நடத்துவதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி குறித்த சந்தேக நபர்களை குற்றமற்றவர்களென நீதவான் விடுதலை செய்துள்ளார். ...
Read More »தமிழில் தேசிய கீதம் பாடப்படாதென்பது நாட்டில் இன நல்லிணக்கம், ஐக்கியத்தை ஏற்படுத்த தடைக்கல்லாக அமையும்
தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் அறிவித்தல் அரசியல் அரங்கில் பெரும் வாதப் பிரதிவாதங்களையும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் உருவாக்கி உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டின் தேசிய கீதத்தை, அந்த நாட்டின் குடிமக்களாகிய மற்றுமோர் இனத்தவர் தமது மொழியில் பாடக்கூடாது. அவ்வாறு பாடப்படமாட்டாது. அதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஓர் அமைச்சர் அறிவித்திருப்பது ஓர் அரசியல் கேலிக் கூத்தாகவே நோக்கப்பட வேண்டும். ஏனெனில் தேசிய கீதம் என்பது பொதுவானது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரியது. அனைத்து மக்களும் சொந்தம் கொண்டாடப்பட ...
Read More »அரசியல் ‘வேட்டை’
ராஜகிரிய பகுதியில் 2016ஆம் ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய விபத்து ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சில நாட்களில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இவர் கைது செய்யப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்வதற்குத் தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, நீதிமன்ற பிடியாணையும் இருக்கவில்லை. கைதுக்காக முன்வைக்கப்பட்ட காரணமும் மிகவும் பலவீனமானது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்து அது. அந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவுமில்லை. சம்பிக்க ரணவக்கவின் வாகனம், நேரடியாக மோதவும் இல்லை. ...
Read More »