கொட்டுமுரசு

மூன்றில் இரண்டு சாத்தியமா..?

பாரா­ளு­மன்றத் தேர்தல் என்­பது குறித்த பிர­தே­சத்தின் ஆளு­மை­க­ளையும் ஆட்­சி­யா­ள­னையும் தீர­மா­னிக்கும் வித்­தி­யா­ச­மான செயற்­பா­டாகும். அதிலும் விகி­தா­சார தேர்தல் முறையின் கீழ் பெறப்­படும் பெறு­மா­னங்கள் சற்றும் வித்­தி­யா­ச­மா­ன­தா­கவே வகுக்­கப்­ப­டு­கி­ன்றன. உதா­ர­ண­மாக நான்கு தேர்தல் தொகு­திகள் கொண்ட ஒரு மாவட்­டத்தில் ஒருவர் தேசி­யப்­பட்­டியல் ரீதி­யா­கவும் தெரிவு செய்­யப்­ப­டு­கிறார். மாவட்­ட­மொன்றில் மூன்று கட்­சி­க­ளுக்கு மேல் போட்­டி­யி­டு­மாயின் விகி­தா­சார முறையில் தனி­யொரு கட்சி முழு ஆச­னங்­க­ளுக்­கு­ரிய உறுப்­பி­னர்­க­ளையும் தம­தாக்கிக் கொள்­வ­தென்­பது சிக்கல் நிறைந்­ததும் ஒவ்­வாத ஒரு முயற்­சி­யு­மாகும். எதிர்­வரும் ஏப்­ரலில் நடை­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்கும் பொதுத் தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை ...

Read More »

சட்­ட­வாட்சி மீதான குற்றச்சாட்டு!

வெளி­நாட்டுத் தூத­ர­கத்தின் பணி­யா­ள­ரா­கிய ஒருவர் மீது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சட்ட நட­வ­டிக்­கைகள் நாட்டின் நியா­ய­மான சட்ட நட­வ­டிக்­கை­க­ளாக சர்­வ­தேச மட்­டத்தில் நாட்டின் பெயரைக் காப்­ப­தாக அமை­ய­வில்லை என்ற தொனி­யி­லேயே இந்த விவ­கா­ரத்தில் சுவிற்­சர்லாந்து அர­சாங்கம் கருத்து வெளி­யிட்­டுள்­ளது. தனது தூத­ரக அதி­காரி ஒருவர் மீது தெளி­வற்ற முறையில் சட்டம் பாய்ந்­தி­ருப்­ப­தா­கவும், தூத­ரகம் என்ற அந்­தஸ்தில் அதன் பணி­யா­ளர்­க­ளுக்கு இருக்க வேண்­டிய பாது­காப்பு உரி­மைகள் போதிய அளவில் நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை என்ற சாரத்­தி­லேயே சுவிற்­ச­ர்லாந்து அரசின் நிலைப்­பாடு வெளிப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது. சட்­ட­வாட்சி சீராக நடை­பெற வேண்டும். அதன் சர்­வ­தேச ...

Read More »

கழன்று போகும் கடிவாளம்!

மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தின் சாதனை என்று கூறத்தக்க விடயம், 19 ஆவது திருத்தச் சட்டம் தான். அந்தத் திருத்தச் சட்டத்தை, இல்லாமல் ஒழிப்பதே, இப்போதைய அரசாங்கத்தின் முதல் வேலைத் திட்டமாக இருக்கிறது. இது ஒன்றும், புதிய அரசாங்கத்தின் இரகசியமான வேலைத் திட்டம் அல்ல; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் வெளிப்படையாகவே இதனைக் கூறி வருகிறார்கள். 19 ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானது என்றும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை இல்லாமல் ஒழிப்பது தான், முதல் வேலையாக இருக்கும் என்றும் அவர்கள் ...

Read More »

துரித கதியில் பிரெக்ஸிட் விவகாரத்தை முடித்துவிட விரும்பும் ஜோன்ஸனின் முன்னாலுள்ள வேகத்தடைகள்!

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதையடுத்து தற்போதைய காலக்கெடுவில் (2020 ஜனவரி 31) அன்று அல்லது அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பெரும்பாலும் வெளியேறும் என்பது இப்போது நிச்சயமாகிவிட்டது. முன்னாள் பிரதமர் தெரேசா மே தனது பிரெக்ஸிட் உடன்படிக்கைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திரும்பத் திரும்ப மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து ஜோன்ஸன் பிரதமராக வந்தார். ஜோன்ஸன் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதியதொரு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு புதிய தேர்தலை நடத்தினார். அவரது கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் ...

Read More »

‘கொலையாளிகளுக்கு’ மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் கறை அகலாது!

சவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் சவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியின் கொலைக்காக ஐந்து இழிவான கையாட்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, அந்தக் கொலை விவகாரத்தின் முடிவாக அமையும் என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் நம்புவாராக இருந்தால் அவர் பரிதாபத்திற்குரிய முறையில் தவறிழைப்பதாகவே இருக்கும். கடந்த வருடம் அக்டோபரில் துருக்கியின் கொலைக்காக ஐந்து இழிவான கையாட்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, அந்தக் கொலை விவகாரத்தின் முடிவாக அமையும் என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் நம்புவாராக இருந்தால் அவர் ...

Read More »

கிறிஸ்துவின் பிறப்பு அன்றும்… இன்றும்…

2019 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாக இடம்பெற்ற குழந்தை இயேசுவின் பிறப்பு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெரு விழாவாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புத நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, இறைமகன் இயேசுவின் பிறப்பு என்றால், என்ன என்பதனை மறந்து வாழ்கிறோமா? என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும். தெய்வத்திருமகன் பெத்லகேமில் எதற்குமே பெறுமதியில்லாத மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால், இன்று பெத்லகேம் அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாகி நாமும் ...

Read More »

ஒன்றுபட்டால் வென்று விடலாம்!

ஒரு சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு பல்­வேறு கார­ணிகள் உந்­து­சக்­தி­யாக அமை­கின்­றன. இவற்றுள் அச்­ச­மூ­கத்­தி­ன­ரி­டையே காணப்­படும் ஒற்­று­மையும் முக்­கிய கார­ணி­யாக அமை­கின்­றது. சமூ­கத்தின் ஒற்­றுமை சீர்­கு­லையும் போது அபி­வி­ருத்தி தடைப்­ப­டு­வ­தோடு மேலும் பல பாதக விளை­வு­களும் ஏற்­படும் என்­பதும் தெரிந்த ஒரு விட­ய­மே­யாகும். இந்த வகையில் மலை­யக சமூ­கத்தை எடுத்­துக்­கொண்டால் இச்­ச­மூ­கத்­தினரிடையே நிலவும் விரி­சல்கள், கட்சி ரீதி­யான மற்றும் தொழிற்­சங்க ரீதி­யான வேறு­பா­டுகள் உள்­ளிட்ட பலவும் இச்­ச­மூ­கத்­தி­னரின் எழுச்­சிக்கு தடைக்­கல்­லாக இருந்து வரு­வ­தாக புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். மேலும் மலை­யக அர­சி­யல்­வா­திகள் இம்­மக்கள் சார்ந்த கோரிக்­கை­களை முன்­வைக்­கும்­போது ...

Read More »

வைராக்கிய அரசியல் நன்மை பயக்காது!

தெற்காசியப் பிராந்­தி­யத்தில் ஜன­நா­யகம் நில­வு­கின்ற நாடு­களில் ஒன்­றாக இலங்கை கணிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜன­நா­யக ஆட்சி நில­வு­கின்­றது. பல்­லின மக்­களும் பல மதங்­களைப் பின்­பற்­று­வோரும் இங்கு ஐக்­கி­ய­மாக வாழ்­கின்­றார்கள் என்ற பொது­வா­னதோர் அர­சியல் பார்­வையும் உண்டு. இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு கோரி முப்­பது வரு­டங்­க­ளாக ஆயுதப் போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த பின்­ன­ணியில் இந்த ஜன­நா­யகக் கணிப்பு நில­வி­யது என்­பது கவ­னத்­துக்குரி­யது. உண்­மையில் இங்கு ஜன­நா­யகம் நில­வு­கின்­றதா என்­பது விமர்­சனப் பண்­பு­களைக் கொண்ட முக்­கி­ய­மான கேள்­வி­. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயுதப் போராட்டம் நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்குக் ...

Read More »

சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் நீங்கினால் கூட்டமைப்பு பிழைத்­துக்­கொள்ளும்!

தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், தமிழீழ மக்கள்  விடு­தலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்­தார்த்­தன்­ ஆ­கியோர் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யேறமாட்­டார்கள் என்­பதே எனது கணிப்பு. அவர்­க­ளுக்கு வேண்­டி­யது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி. எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்­பார்கள். எவ்­வாறு நடந்­து­கொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்­கேற்­ற­வாறு நடிப்­பார்கள். கொள்­கைகள் பற்றி அவர்கள் எவ­ருமே அலட்­டிக்­கொள்­வ­தில்லை என, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் சி..வி. விக்கி­னேஸ்­வரன்   அளித்த பிரத்­தி­யேக நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு ...

Read More »

தூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்தில் முரண்படும் அரசாங்கங்கள்!

கடந்த மாதம் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் உள்நாட்டு பெண் ஊழியர், கடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற விவகாரத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் சுயாதீனமான பொலிஸ் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படுகின்றவற்றையும் ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தை அரசியல் மயப்படுத்துவது உண்மை கண்டறியப்படுவதைத் தடுக்கும் என்பதால் அதை அரசியல் மயப்படுத்தக்கூடாது என்பதில் ஜனாதிபதி மிகுந்த அக்கறை காட்டுகிறார். அரசியல் மயப்படுத்துவது அரசாங்கத்திற்கும் , இலங்கைகக்கும் சர்வதேச ரீதியில் அபகரீத்தியை ஏற்படுத்தும் என்று ஒரு வட்டாரம் கூறியது. ...

Read More »