கிறிஸ்துவின் பிறப்பு அன்றும்… இன்றும்…

2019 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாக இடம்பெற்ற குழந்தை இயேசுவின் பிறப்பு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெரு விழாவாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புத நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, இறைமகன் இயேசுவின் பிறப்பு என்றால், என்ன என்பதனை மறந்து வாழ்கிறோமா? என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.

தெய்வத்திருமகன் பெத்லகேமில் எதற்குமே பெறுமதியில்லாத மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால், இன்று பெத்லகேம் அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாகி நாமும் அத்திருத்தலத்திற்கு யாத்திரையும் சென்றிருக்கலாம். ஆயினும், ஆண்டவர் இயேசு எமது உள்ளமெனும் மாட்டுத் தொழுவத்தில் பிறந்திட நாம் இடம் ஒதுக்காவிட்டால், எமது யாத்திரை மட்டுமல்ல, நாங்களும் பெறுமதியற்ற ஈனப்பிறவிகளே என்பதனை உணருகிறோமா?

இஸ்ராயேல் மக்கள் பல்லாயிரம் வருடங்களான தமது அடிமைத்தனத்திலிருந்து மீட்க மெசியா பிறப்பாரென எதிர்பார்த்ததாகத் திருவிவிலியம் பல இடங்களில் தெரிவிக்கின்றது. இன்றும் அதே மனிதன் தனது இனத்தின் விடியலைத்தேடி சொந்த நாட்டிலேயே அகதியானது மட்டுமல்ல, புலம்பெயர்ந்தும் அகதியாக அலைவது வரலாறாகப் பதிவாகவில்லையா?

மார்கழி நள்ளிரவில் பிறந்த குழந்தை தீவனத் தொட்டியில் வளர்த்தப்பட இடையரும், ஞானிகளும் தெண்டனிட்டு வணங்கினர். கடைசி இரா உணவில், “இது எனது உடல் வாங்கி உண்ணுங்கள்“ என்று தரப்படும் தீவனத் தொட்டியின் ஆன்மீக உணவில் தகுதியோடு பங்கெடுக்கிறோமா? அந்தத் திரு உடலை ஈரைந்து மாதம் சுமந்த “அருள் நிறைந்த பேழை“க்கு மதிப்பளிக்கிறோமா? அல்லது, நற்கருணைப் பேழையில் வீற்றிருப்பவரை பக்தியோடு பணிந்து வணங்குகிறோமா?

அன்றைய மனிதன் பயங்கர விலங்குகளிலிருந்து பாதுகாக்க ஆயுதங்களை உருவாக்கினான். இன்றைய மனிதன் கொடிய மிருகங்களை செல்லப் பிராணிகளாக்கி, தனது சொந்தச் சகோதரங் களையே கொன்றொழிக்கப் பல்வேறு ஆயுதங்களை உருவாக்கிப், பாவம் வந்து வீட்டு வாசலில் பாய்விரித்துப் படுத்திருக்க இடமளிக்கவில்லையா?

“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக” (லூக்கா 2:14) என்று வானதூதர்கள் பாடியது, உள அமைதி தொடங்கி உலக அமைதி வரைக்கும் என்பதாகும். அமைதியை உருவாக்குவதே கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பதை நாம் உணர்ந்திருந்தால், குழு சேர்த்து, சதி செய்து குழிபறிக்கும் முயற்சிகள், பல்வேறு முரண் பாடுகள், போட்டி பொறாமைகள் எதற்காக?

மார்கழிக் கடுங்குளிரில், பிரசவ வலியில் மரி அன்னை துடி துடித்தும், சத்திரத்திலும் இடம் கொடாது கதவை மூடிய மனிதர்களாக நாம் இன்றும் வாழவில்லையா?

கொட்டும் மழையிலும், கொதிக்கும் வெய்யிலிலும், பனியின் குளிரிலும், பசியின் கொடுமையிலும் அபயம் தேடும் ஏழைகளின் உருவில் வரும் மரி அன்னைகளுக்காக இதயக் கதவைத் திறப்போர் எத்தனை பேர்?

புனித நள்ளிரவில் மந்தைகளைப் பாதுகாக்க ஏழை இடையர் விழித்திருக்க, வரலாற்றை முன்னும் பின்னுமாகப் பிரித்த இறைமகன் இயேசு எமது வழிகாட்டும் விடிவெள்ளியாகப் பிறந்தார். ஆயினும், சொந்த உறவுகளையே பிரித்தாளும் மனிதனின் கொடூர உள்ளத்தில் இரக்கம், கருணை,பரிவு, பாசம் என்ற “மனித நேய விடிவெள்ளி“ பிறந்துள்ளதா?

குழந்தை இயேசு, “உலகமெங்கும் சென்று என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுங்கள்” என்று கூறவில்லை. மாறாக, தெருவோரப் பிச்சைக்காரரிலும், தனிமையில் வாடும் முதியவரிலும், கவனிப்பாரற்ற நோயாளியிலும், துன்பங்களோடும், வேதனைகளோடும் சிறைகளில் சித்திரவதைப்படுவோர் மத்தியிலும் இன்றும் பிறப்பதாகப் போதித்ததனை நாம் உணருகிறோமா?

குழந்தை இயேசு பிறந்ததும் கொல்லத் தேடிய ஏரோது, இரு வயதிற்குட்பட்ட அப்பாவிக் குழந்தைகளைக் கொலை செய்தான். வேண்டாக் கர்ப்பத்தால் உருவாகும் பச்சிளம் சிசுக்களைக் கருவறையிலேயே கல்லறைக்கு அனுப்பும் ஏரோதுக்கள் எம்மிடையே இல்லையென்போமா?

தனக்கு நிகரான அரசன் பிறந்ததாக ஏரோது கேள்விப்பட, முழு எருசலேமுமே அவனோடு கலங்கியது. இன்றும் பல நாடுகளில் அதிகாரம் செலுத்தும் ஆளும் இனம், தமது சிறுபான்மை இனத்தவரைப் படுகொலை செய்வதைக் கேள்விப்பட்டு ஐக்கிய நாடுகளே கலங்கவில்லையா?

குழந்தை இயேசுவைத் தரிசிக்க ஞானிகள் வழிதேடி ஏரோதுவிடம் சென்றபோது, உதவி செய்வதாக ஏமாற்றினான். இன்றும் எம்மிடையே நல்ல செயல்களைத் தடுக்க வெனப் பல ஏரோதுக்கள் இணைந்து, நல்ல முயற்சிகளைத் திசை திருப்பிக் குழப்புவதில்லையா? அல்லது நல்லது செய்வோரை ஓரங்கட்டி ஒதுக்குவதில்லையா?

பாலகன் இயேசுவின் பிறப்பு மிக எளிமையானதாகும். இன்றைய உலக மாயக் களியாட்டங்கள், ஒருபால் திரு மணம், விவாகரத்து, திருமணம் செய்யாது கூடி வாழுதல் என்று கிறிஸ்து பிறப்பின் விழுமியங்களை இழந்த எம்மிடையே “கிறிஸ்து அர்த்தமுள்ளதாகப் பிறப்பது“ எப்போது?

ஆண்டவர் இயேசுவினுடைய பிறப்பு விடுதலையும், சமாதானமும் மட்டுமல்ல, பாவத்தின் அடிமையில் வாழ்வோர் விடுதலை பெறவும், ஏழைகள், புறந்தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற்று அனைவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்பதாகும். நுகர்வுக் கலாசாரச் சூழலில் “நான், என்னுடையது“ என்பது தவிர இவ்வாறான விழுமியங்கள் வாழப்படுகின்றதா?

ஆண்டுகள் பல கடந்தும், ஆண்டவர் இயேசுவின் பிறப்பு இன்று உலகம் முழுவதும் அர்த்தமின்றிக் குடியும் கும்மாளமும், விநோதமுமாகி, கிறிஸ்மஸ் தாத்தாவே பணம் வசூலிப்பவராக மாற்றமடைந்து, கிறிஸ்து பிறப்பின் அர்த்தமே குழிதோண்டிப் புதைக்கப்படும் நிலையில், கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் எமது உள்ளங்கள் மாற்றமடைந்துள்ளதா?

வானளாவக் கிறிஸ்மஸ் மரங்கள் உயர்ந்தாலும், எமது உள்ளங்கள் மனித மாண்பை உயர்த்தும் எண்ணக் கருத்துக்களால் உயர்ந்துள்ளதா? ஏழைகள் ஏழைகளாகத் தொடர்ந்து வாழ, செல்வந்தர் செல்வம் பெருக்கும் நோக்கத்தில் முன்னேற, ஒரு நேர உணவுக்காக ஏங்குவோர் எம்மிடையே இல்லை என்போமா? அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பு விழாவைக் காண, எமது வெளிவேடக் கிறிஸ்தவ வாழ்விலிருந்து புதுப் பிறப்பெடுப்போம்.

“மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்“ – (மத்தேயு 25:41)

கிறிஸ்து பிறப்பின் பின்னணி

‘உன்­ன­தங்­க­ளிலே கட­வு­ளுக்கு மகிமை உண்­டா­குக! பூவு­லகில் நல்­ம­னத்­தோ­ருக்கு அமை­தியும் ஆகுக. உம்மைப் புகழ்­கின்றோம். உம்மை வாழ்த்­து­கின்றோம்’ என்று வான­தூ­தர்கள் பேரணி இறை­வனைப் புகழ்ந்­து­பாட வானில் விண்­மீன்கள் ஒளிர்ந்­தன. இயேசு கிறிஸ்­துவின் பிறப்பின் முதல் அடை­யா­ள­மாக இருந்­தது வால் நட்­சத்­திரம். அது பெத்­ல­கேமின் விண்மீன் என்றும் ஆண்­ட­வரின் விண்மீன் என்றும் சொல்­லப்­பட்­டது. இயேசு பிறப்­ப­தற்கு முன்பே முன் அடை­யா­ள­மாக இந்த நட்­சத்­திரம் வானத்தில் தோன்­றி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

கிறிஸ்­துவின் பிறப்பை அறி­விக்கும் வித­மா­கவும் கிறிஸ்து இயே­சுவை வர­வேற்கும் வித­மா­கவும் கிறிஸ்­துமஸ் கொண்­டாட்­டத்தின் அழைப்பு மணி­யா­கவும் மகிழ்ச்­சியின் அடை­யா­ள­மா­கவும் விளங்கும் இந்த வால்­நட்­சத்­தி­ரத்தை `மீயொளிர் விண்மீன்’ என்றும் `வால்­வெளி வியாழன்’ என்றும் சொல்­வார்கள்.

கிறிஸ்து பிறந்த செய்தி முதலில் யூதர்­க­ளுக்குத் தெரி­யாமல் இருந்­தது. ஆனால் கிழக்கு தேச நாடு­களைச் சேர்ந்த அறிவில் சிறந்த ஞானி­களில் ஒரு சில­ருக்கு இயே­சுவின் பிறப்பு பற்­றிய செய்தி தீர்க்­க­த­ரி­ச­ன­மாகத் தெரிந்­தி­ருந்­தது. அங்­கி­ருந்து புறப்­பட்ட அந்த மூன்று ஞானி­களும் ஜெரு­சலேம் வந்து விண்மீன் வழி­காட்­டிய இடத்­துக்குச் செல்­லாமல் நேராக ஏரோது மன்­னனின் அரண்­ம­னைக்குச் சென்­றனர்.  அங்கே அவர்கள் `யூத­ருக்கு அர­ச­ராகப் பிறந்­தி­ருக்­கி­றவர் எங்கே?’ என்று வின­வி­னார்கள். இந்தச் செய்தி யூதர்­களின் அர­ச­னான ஏரோதின் அரண்­ம­னையில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

ஆனால் ஏரோது அரசன், ஞானி­களின் கோரிக்­கையை அப்­ப­டியே விட­வில்லை. உடனே மூப்­பர்­க­ளையும் மறைநூல் அறி­ஞர்­க­ளையும் அழைத்து இவ்­வி­டயம் குறித்து வின­வினான். அதற்கு மறைநூல் அறி­ஞர்கள் ”யூதா நாட்டுப் பெத்­ல­கேமின் யூதாவின் ஆட்சி மையங்­களில் நீர் சிறி­ய­தில்லை. ஏனெனில் உம்மை ஆயர் என ஆழ்­பவர் ஒருவர் உம்­மி­ட­மி­ருந்தே தோன்­றுவார்” என்ற மறைநூல் வாக்­கினை ஏரோ­து­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.

மறைநூல் அறி­ஞர்கள் வாயி­லாகப் பெறப்­பட்ட செய்­தியை ஏரோது மூன்று ஞானி­க­ளுக்கும் தெரி­யப்­ப­டுத்­தினான்.  இதை­ய­டுத்து அவர்கள் விண்மீன் காட்­டிய வழியில் பெத்­லகேம் நோக்கிச் சென்­றார்கள்.  நட்­சத்­தி­ரத்தைக் கண்டு அக­ம­கிழ்ந்த அவர்கள் தேவன் மனி­த­னாக அவ­த­ரித்த மாட்டுக் கொட்­ட­கையைச் சென்­ற­டைந்­தனர். அங்கே அவர்கள் இயே­சுவைக் கண்­டதும் மண்­டி­யிட்டு விழுந்து அவரை வணங்­கி­னார்கள். அத்­துடன் தாங்கள் கொண்டு வந்த காணிக்­கை­க­ளான தூபம், பொன், வெள்ளைப் போளம் என்­ப­வற்றை இயே­சுவின் முன்னால் வைத்­து­விட்டு தங்கள் நாடு­க­ளுக்குத் திரும்­பினர்.

ஞானிகள் இயே­சு­வுக்கு காணிக்­கை­யாக கொடுத்த மூன்று அன்­ப­ளிப்­பு­களும் மூன்­று­வித அர்த்­தத்தை நமக்குச் சொல்­கின்­றன. தூபம் –- இயே­சுவின் பிறப்­பா­னது கடவுள் நிலையில் அவர் இருக்­கிறார் என்றும் ஆரா­த­னைக்­கு­ரி­யவர் என்றும் அர்த்­தப்­ப­டு­கி­றது. பொன்  – –  இயேசுக் கிறிஸ்து அர­சர்­க­ளுக்­கெல்லாம் அர­ச­ராக தனது மந்­தை­களை ஆட்சி செய்­ப­வ­ராக அவ­த­ரித்­தி­ருக்­கிறார் என்­பதை புலப்­ப­டுத்­து­கி­றது. வெள்­ளை­போளம் – –  மாட்டுத் தொழு­வத்தில் பிறந்த இயேசு மக்­க­ளுக்­காக தனது உயிரை தியாகம் செய்வார் என்றும் அவர் கல்­ல­றையில் அடக்கம் செய்­யப்­ப­டுவார் என்­ப­தையும் நினை­வு­ப­டுத்­து­கி­றது. இதேபோல் இயே­சுவின் பிறப்பை வான­தூ­தர்­க­ளுக்கு தெரி­ய­வந்­தபோது அவர்கள் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர். தேவன் மனி­த­னாக அவ­த­ரித்­தி­ருக்­கிறார் என்ற செய்­தியை அறி­விக்க, முதலில் வசதி படைத்­த­வர்­களைத் தேடிச் செல்­லாமல் இரவில் மந்­தை­களைக் காத்­துக்­கொண்­டி­ருந்த இடை­யர்­க­ளிடம் சென்று கூறி­னார்கள். இந்த அறிவிப்பைக் கேட்டதும் இடையர்கள் ஆர்வத்துடன் இயேசுவைக் காணச் சென்றார்கள். இங்கே சொல்லப்பட்டவை அனைத்தும் முற்றிலும் உண்மை என்பதை இயேசுவைக் கண்ட பலருக்கும் ஆச்சர்யம் எழுந்தது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சிந்திக்கக்கூடிய ஒன்றே. பாவிகளை மீட்கவே பாலன் இயேசு ஏழையாக பாரில் அவதரித்தார் என்ற உண்மையை உலகம் உணர வேண்டும்.

அல்பிறெட் ஞானராஜா, 
மொன்றியல், கனடா.