பாராளுமன்றத் தேர்தல் என்பது குறித்த பிரதேசத்தின் ஆளுமைகளையும் ஆட்சியாளனையும் தீரமானிக்கும் வித்தியாசமான செயற்பாடாகும். அதிலும் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பெறப்படும் பெறுமானங்கள் சற்றும் வித்தியாசமானதாகவே வகுக்கப்படுகின்றன. உதாரணமாக நான்கு தேர்தல் தொகுதிகள் கொண்ட ஒரு மாவட்டத்தில் ஒருவர் தேசியப்பட்டியல் ரீதியாகவும் தெரிவு செய்யப்படுகிறார். மாவட்டமொன்றில் மூன்று கட்சிகளுக்கு மேல் போட்டியிடுமாயின் விகிதாசார முறையில் தனியொரு கட்சி முழு ஆசனங்களுக்குரிய உறுப்பினர்களையும் தமதாக்கிக் கொள்வதென்பது சிக்கல் நிறைந்ததும் ஒவ்வாத ஒரு முயற்சியுமாகும். எதிர்வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ...
Read More »கொட்டுமுரசு
சட்டவாட்சி மீதான குற்றச்சாட்டு!
வெளிநாட்டுத் தூதரகத்தின் பணியாளராகிய ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் நாட்டின் நியாயமான சட்ட நடவடிக்கைகளாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் பெயரைக் காப்பதாக அமையவில்லை என்ற தொனியிலேயே இந்த விவகாரத்தில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. தனது தூதரக அதிகாரி ஒருவர் மீது தெளிவற்ற முறையில் சட்டம் பாய்ந்திருப்பதாகவும், தூதரகம் என்ற அந்தஸ்தில் அதன் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு உரிமைகள் போதிய அளவில் நிலைநாட்டப்படவில்லை என்ற சாரத்திலேயே சுவிற்சர்லாந்து அரசின் நிலைப்பாடு வெளிப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சட்டவாட்சி சீராக நடைபெற வேண்டும். அதன் சர்வதேச ...
Read More »கழன்று போகும் கடிவாளம்!
மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தின் சாதனை என்று கூறத்தக்க விடயம், 19 ஆவது திருத்தச் சட்டம் தான். அந்தத் திருத்தச் சட்டத்தை, இல்லாமல் ஒழிப்பதே, இப்போதைய அரசாங்கத்தின் முதல் வேலைத் திட்டமாக இருக்கிறது. இது ஒன்றும், புதிய அரசாங்கத்தின் இரகசியமான வேலைத் திட்டம் அல்ல; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வெளிப்படையாகவே இதனைக் கூறி வருகிறார்கள். 19 ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானது என்றும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை இல்லாமல் ஒழிப்பது தான், முதல் வேலையாக இருக்கும் என்றும் அவர்கள் ...
Read More »துரித கதியில் பிரெக்ஸிட் விவகாரத்தை முடித்துவிட விரும்பும் ஜோன்ஸனின் முன்னாலுள்ள வேகத்தடைகள்!
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் பிரெக்ஸிட் உடன்படிக்கைக்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதையடுத்து தற்போதைய காலக்கெடுவில் (2020 ஜனவரி 31) அன்று அல்லது அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பெரும்பாலும் வெளியேறும் என்பது இப்போது நிச்சயமாகிவிட்டது. முன்னாள் பிரதமர் தெரேசா மே தனது பிரெக்ஸிட் உடன்படிக்கைக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திரும்பத் திரும்ப மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து ஜோன்ஸன் பிரதமராக வந்தார். ஜோன்ஸன் முதலில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதியதொரு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு புதிய தேர்தலை நடத்தினார். அவரது கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் ...
Read More »‘கொலையாளிகளுக்கு’ மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் கறை அகலாது!
சவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் சவூதி அதிருப்தியாளரான பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கியின் கொலைக்காக ஐந்து இழிவான கையாட்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, அந்தக் கொலை விவகாரத்தின் முடிவாக அமையும் என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் நம்புவாராக இருந்தால் அவர் பரிதாபத்திற்குரிய முறையில் தவறிழைப்பதாகவே இருக்கும். கடந்த வருடம் அக்டோபரில் துருக்கியின் கொலைக்காக ஐந்து இழிவான கையாட்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, அந்தக் கொலை விவகாரத்தின் முடிவாக அமையும் என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான் நம்புவாராக இருந்தால் அவர் ...
Read More »கிறிஸ்துவின் பிறப்பு அன்றும்… இன்றும்…
2019 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேமில் மிக எளிமையாக இடம்பெற்ற குழந்தை இயேசுவின் பிறப்பு, இன்று உலகம் முழுவதும் இணைந்து கொண்டாடும் பெரு விழாவாக மாற்றம் பெற்றாலும், அந்த அதிசயம் மிக்க அற்புத நிகழ்வின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமா? அல்லது, இறைமகன் இயேசுவின் பிறப்பு என்றால், என்ன என்பதனை மறந்து வாழ்கிறோமா? என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும். தெய்வத்திருமகன் பெத்லகேமில் எதற்குமே பெறுமதியில்லாத மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால், இன்று பெத்லகேம் அகில உலகமும் போற்றும் ஒரு பரிசுத்த யாத்திரைத் தலமாகி நாமும் ...
Read More »ஒன்றுபட்டால் வென்று விடலாம்!
ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு காரணிகள் உந்துசக்தியாக அமைகின்றன. இவற்றுள் அச்சமூகத்தினரிடையே காணப்படும் ஒற்றுமையும் முக்கிய காரணியாக அமைகின்றது. சமூகத்தின் ஒற்றுமை சீர்குலையும் போது அபிவிருத்தி தடைப்படுவதோடு மேலும் பல பாதக விளைவுகளும் ஏற்படும் என்பதும் தெரிந்த ஒரு விடயமேயாகும். இந்த வகையில் மலையக சமூகத்தை எடுத்துக்கொண்டால் இச்சமூகத்தினரிடையே நிலவும் விரிசல்கள், கட்சி ரீதியான மற்றும் தொழிற்சங்க ரீதியான வேறுபாடுகள் உள்ளிட்ட பலவும் இச்சமூகத்தினரின் எழுச்சிக்கு தடைக்கல்லாக இருந்து வருவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். மேலும் மலையக அரசியல்வாதிகள் இம்மக்கள் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கும்போது ...
Read More »வைராக்கிய அரசியல் நன்மை பயக்காது!
தெற்காசியப் பிராந்தியத்தில் ஜனநாயகம் நிலவுகின்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை கணிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜனநாயக ஆட்சி நிலவுகின்றது. பல்லின மக்களும் பல மதங்களைப் பின்பற்றுவோரும் இங்கு ஐக்கியமாக வாழ்கின்றார்கள் என்ற பொதுவானதோர் அரசியல் பார்வையும் உண்டு. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கோரி முப்பது வருடங்களாக ஆயுதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் இந்த ஜனநாயகக் கணிப்பு நிலவியது என்பது கவனத்துக்குரியது. உண்மையில் இங்கு ஜனநாயகம் நிலவுகின்றதா என்பது விமர்சனப் பண்புகளைக் கொண்ட முக்கியமான கேள்வி. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் நாட்டின் ஜனநாயகத்துக்குக் ...
Read More »சம்பந்தனும் சுமந்திரனும் நீங்கினால் கூட்டமைப்பு பிழைத்துக்கொள்ளும்!
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறமாட்டார்கள் என்பதே எனது கணிப்பு. அவர்களுக்கு வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர் பதவி. எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்பார்கள். எவ்வாறு நடந்துகொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்கேற்றவாறு நடிப்பார்கள். கொள்கைகள் பற்றி அவர்கள் எவருமே அலட்டிக்கொள்வதில்லை என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி..வி. விக்கினேஸ்வரன் அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு ...
Read More »தூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்தில் முரண்படும் அரசாங்கங்கள்!
கடந்த மாதம் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் உள்நாட்டு பெண் ஊழியர், கடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற விவகாரத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் சுயாதீனமான பொலிஸ் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படுகின்றவற்றையும் ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தை அரசியல் மயப்படுத்துவது உண்மை கண்டறியப்படுவதைத் தடுக்கும் என்பதால் அதை அரசியல் மயப்படுத்தக்கூடாது என்பதில் ஜனாதிபதி மிகுந்த அக்கறை காட்டுகிறார். அரசியல் மயப்படுத்துவது அரசாங்கத்திற்கும் , இலங்கைகக்கும் சர்வதேச ரீதியில் அபகரீத்தியை ஏற்படுத்தும் என்று ஒரு வட்டாரம் கூறியது. ...
Read More »