Home / செய்திமுரசு (page 750)

செய்திமுரசு

சுவிஸில் ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி

வெண்பனி தேசமென செல்லமாக அழைக்கப்படும் சுவிட்சலாந்து நாட்டின் சொலத்துாண் மாநிலத்தில் ரயில் நிலையத்தின் கீழ்த் தளத்தில் உள்ள தமிழர் ஒருவருக்குச் சொந்தமான கடையில் தொழில் ரீதியில் நண்பர்களாக இருந்த இருவரிடம் ஏற்பட்ட தகராறு நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சூட்டில் முடிந்துள்ளது. சொலத்தூண் மாநகரில் பிரபலமான சோலோ மூவி உரிமையாளர் வசி என்பவராலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோலோ மூவியில் சில ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து தற்சமயம் தனியாக ...

Read More »

3 நிமிடத்தில் 122 செல்பி

3 நிமிடத்தில் 122 செல்பிக்கள் எடுத்து அமெரிக்க பாடகர் டோனி வால்பெர்க் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார். ஸ்மார்ட் போன்களின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைமீது நின்று செல்பி, ஆபத்தான இடங்களில் செல்பி என விதவிதமாக செல்பி எடுத்து உலகளவில் பலர் புகழ்பெற்று வருகின்றனர். இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே அதிகபட்ச உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் ...

Read More »

அவுஸ்ரேலியா: கேளிக்கைத் தள அசம்பாவிதத்தில் பிழைத்த 2 சிறார்கள்

அவுஸ்ரேலியாவின் ட்ரீம்வர்ல்ட் (Dreamworld) கேளிக்கைத் தலத்தில் ஏற்பட்ட விபத்தில், அதிர்ஷ்டவசமாக இரு சிறுவர்கள் தப்பிப் பிழைத்ததாக அந்நாட்டுப் காவல்துறையினர்  கூறியுள்ளனர். அந்தச் சம்பவத்தில் 4 பேர் மாண்டனர்.அதிவேகமாக ஓடும் செயற்கை ஆற்று படகுப் பயணத்தின்போது சம்பவம் ஏற்பட்டது. இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதை கண்காணிப்புக் கேமரா பதிவுகள் காட்டின. ஒரு படகில் இருந்த அந்த இரு சிறுவர்கள் தூக்கி எறியப்பட்டதாகப் காவல்துறையினர் கூறினர். கோல் கோஸ்ட்டில் அமைந்துள்ள ட்ரீம்வர்ல்ட் ...

Read More »

‘நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியை இந்திய அரசு ஊக்குவிக்கவேண்டும்’ – அவுஸ்ரேலியா பேராசிரியர் கோரிக்கை

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியை இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பிரபல அவுஸ்ரேலியா பேராசிரியர் கூறினார். அவுஸ்ரேலியாவின் உயரிய விருது அவுஸ்ரேலியா தலைநகர் கான்பெர்ரா நகரில் உள்ள அவுஸ்ரேலியா தேசிய பல்கலைக்கழகத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மின்னணு பொருள் பொறியியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர், சென்னுப்பட்டி ஜெகதீஸ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் அவுஸ்ரேலியா’ என்னும் உயரிய விருதையும் ...

Read More »

அவுஸ்ரேலியாவை சேர்ந்த வயதான உராங்குட்டான் – கின்னஸ்

உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமை அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பான் என்ற பெண் உராங்குட்டானுக்கு கிடைத்திருக்கிறது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பான் மிக வயதான உராங்குட்டான் என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மலேசியா ...

Read More »

படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகள் மீது இனப்பாகுபாடு

படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைமுறைபடுத்தப்பட்ட விதிமுறைகளால் அகதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அகதிகளுக்கு இணைப்பு வீசா என்ற பெயரில் வழங்கப்படுகின்ற தற்காலிக வீசாவின் ஊடாக அங்கு தொழில்புரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தங்களுக்கு இடையிலான தொடர்புகளை அவர்களைப் போன்ற அகதிகளுடனேயே ...

Read More »

அவுஸ்ரேலியா பொழுதுப்போக்கு பூங்காவில் பயங்கர விபத்து

அவுஸ்ரேலியா நாட்டின் குவீன்ஸ்லேன்ட் மாநிலத்தில் உள்ள பிரபல தீம் பார்க்கில் நேற்று (25)  ஏற்பட்ட பயங்கர விபத்தில் நான்குபேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவின் குவீன்ஸ்லேன்ட் மாநிலத்தில் சுற்றுலாவாசிகள் அதிகமாக வருகைதரும் கோல்ட் கோஸ்ட் நகரின் கூமோரா பகுதியில் ’டிரீம் வேர்ல்ட்’ என்னும் பிரபல தீம் பார்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு அம்சமான ’தன்டர் ரிவர் ரேபிட் ரைட்’ என்னும் அலையடிக்கும் ஆற்றுநீரில் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கான புதிய வகை சுற்றுலா விசாக்கள் நடைமுறைப்படுத்தப்படும்

2015-2016 காலப்பகுதியில் சுமார் 60,000 அவுஸ்ரேலிய விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் செனற் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளது. விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமை, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல காரணங்களினால் இவை ரத்துச் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை இந்தவருட இறுதியில் அவுஸ்ரேலியாவுக்கான புதிய வகை சுற்றுலா விசாக்கள் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவுத் திணைக்களத்தின் செயலாளர் Michael Pezzullo செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார். அதில் முக்கியமாக பல ...

Read More »

“உலகம் முழு­வதும் 70 மில்­லியன் மக்கள் தமிழ் மொழி பேசு­கின்­றனர்’ – அவுஸ்திரேலிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர்

அவுஸ்­தி­ரே­லி­யாவின் தேசிய கல்வித் திட்­டத்தில் தமிழ் மொழியை ஒரு பாட­மாக இணைத்துக் கொள்ள வேண்டும் என அந்­நாட்டின் நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஹு மெக்­டெர்மார்ட் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். புரொஸ்பெக் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஹுமெக்­டெர்மார்ட், தமிழ் மொழியை பாடத்­திட்­டத்தில் சேர்க்க வேண்டும் என நீண்­ட­கா­ல­மாக கோரி வரு­பவர். இந்­நி­லையில், நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் இது தொடர்­பான பிரே­ர­ணையை அவர் முன்­வைத்­துள்ளார். நாடா­ளு­மன்­றத்தில் இது ...

Read More »

பூரண கர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி இன்றைய தினம் வடக்கு முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. யாழ்.நகர் உட்பட அனைத்து இடங்களிலும் சன நடமாட்டம் மிக மிக குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் காலை ஆறு மணிமுதல் இரவு வரை வடக்கில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறு வர்த்தக சங்கங்களும், தனியார் அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபட வேண்டாம் என வடக்கு மாகாண ...

Read More »