அவுஸ்ரேலியாவுக்கு செல்வது இலகுவாக்கப்பட்டுள்ளது

இம்மாதம் முதல்அவுஸ்ரேலியாவுக்கான தற்காலிக வேலை விசாவுக்கு விண்ணப்பிப்பது இலகுவானதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றப்பட்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன .

கடந்த 19ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் விசா விண்ணப்ப நடைமுறையை மிகவும் இலகுவாக்கும் என அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஏற்கனவே இருந்த 7 விசா உபபிரிவுகள் புதிய 4 பிரிவுகளின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன ஆகியனவே இப்புதிய 4 பிரிவுகளில் அடங்குகின்றன.

குடிவரவுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடிப்படையிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டு குடிவரவுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை காலமும் இருந்த காகிதப் படிவ முறைமை மாற்றப்பட்டு ஊடாக இணையம் மூலம் மட்டுமே இப்புதிய விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

புதிய பிரிவான Subclass 400 Temporary Work (Short Stay Specialist) விசாவானது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான தற்காலிக வேலை விசாவாகும்.

அதேநேரம் Subclass 408 Temporary Activity visa பிரிவானது கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு, சமயம் சம்பந்தமான வேலைகள் உட்பட பல்வேறு தேவைகளின் நிமித்தம் அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கான தற்காலிக விசாவாகும் .

புதிய Subclass 407 Training visa’ குறுகிய கால தொழில்சார் பயிற்சிநெறிகளை மேற்கொள்பவர்களுக்கானது.

மற்றும் Subclass 403 Temporary Work (International Relations)’ விசாவானது இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்றின்கீழ் பணிபுரிபவர்கள், இரண்டாவது மொழி ஒன்றைக் கற்பிப்பவர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகளின் கீழ் பணிபுரிபவர்கள் உள்ளிட்டவர்களுக்கானது.

இதேவேளை நவம்பர் 19ம் திகதிக்கு முன்னர் தற்காலிக வேலை விசாக்கள் எதற்காவது விண்ணப்பித்தவர்களின் விசா விண்ணப்பங்கள் முன்பிருந்த நடைமுறையின்படியே பரிசீலிக்கப்படுமென குடிவரவுத் திணைக்களத்தைச் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.