அவஸ்ரேலியாவின் மெல்பர்ன் நகரில் மகரந்த ஒவ்வாமையால் பலருக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் இறந்துள்ளனர். அந்தச் சம்பவம் காலவரையற்ற அவசர நிலை என பதிவாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை விக்டோரியா மாநிலத்தில் பெய்த கடும் மழையாலும் காற்றாலும் ஏற்பட்ட ஈரத்தை புல்லரிசி பூஞ்சருகுகள் (Rye Grass Pollen) உள்வாங்கின.
அதன் பின் அவை ஆயிரக்கணக்கில் சிறிய துகள்களாய் மாறின. எண்ணாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மெல்பர்ன் மருத்துவமனைகள் சிகிச்சையளித்து வருகின்றன.