Home / செய்திமுரசு / அவுஸ்திரேலியமுரசு / அவுஸ்ரேலியாவின் ஒருநாள் அணியில் புதுமுக வீரர்

அவுஸ்ரேலியாவின் ஒருநாள் அணியில் புதுமுக வீரர்

நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியா விளையாட இருக்கிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணியில் புதுமுக வீரர் இடம்பிடித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று(24) அடிலெய்டில் பகல் – இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

இந்த போட்டி முடிந்த பின்னர் அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சேப்பல்- ஹெட்லி ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4-ந்திகதி சிட்னியில் தொடங்குகிறது. 2-வது போட்டி கான்பெர்ராவிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதி மெல்போர்னிலும் நடக்கிறது.

இதற்கான அவுஸ்ரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக வீரர் கார்ட்ரைட் இடம்பிடித்துள்ளார். அத்துடன் நீண்ட காலமாக காயம் காரணமாக அவுஸ்ரேலியா அணியில் இடம்பிடிக்காமல் இருந்த பேட் கம்மின்சும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்ரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஸ்டீவ் ஸ்மித், 2. வார்னர், 3. ஜார்ஜ் பெய்லி, 4. ஹில்டன் கார்ட்ரைட், 5. பேட் கம்மின்ஸ், 6. ஜேம்ஸ் பால்க்னர், 7. ஆரோன் பின்ஞ், 8. ட்ரேவிஸ் ஹெட், 9. ஹசில்வுட், 10. மிட்செல் மார்ஷ், 11. கிளென் மேக்ஸ்வெல், 12. மிட்செல் ஸ்டார்க், 13. மேத்யூ வடே, 14. ஆடம் சம்பா.

About குமரன்

Check Also

அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ...