அவுஸ்ரேலியாவிடம் இந்தியா தோல்வி

4 நாடுகள் விளையாடும் ஹாக்கி தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 2-3 என தோல்வியடைந்தது.

இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நான்கு அணிகள் மோதும் ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.

தொடக்க ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான அவுஸ்ரேலியாவும், சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரை வென்ற இந்தியாவும் பலப்பரீட்சை நடத்தின.

21-வது நிமிடத்தில் இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக ஆஸ்திரேலியாவின் ஜெரேமி ஹெய்வுட் (24 மற்றும் 36-வது நிமிடத்தில்) இரண்டு கோல்கள் போட்டார். அத்துடன் நிற்காமல் அந்த அணியின் ட்ரென்ட் மிட்டோன் 43-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆஸ்திரேலியா 3-1 முன்னிலைப் பெற்றது.

அதன்பின் கடுமையான போராட்டத்திற்குப்பின் ரூபிந்தர் பால் சிங் 53-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-3 என பின்தங்கிய நிலையில் இருந்தது. கடைசி 7 நிமிடத்தில் இந்திய வீரர்களால் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் ஆஸ்திரேலியா 3-2 என இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்துள்ளது.

இந்திய நேரப்படி நாளை மதியம் 12.30 மணிக்கு மலேசியாவையும், 26-ந்திகதி காலை 11.30 மணிக்கு நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.