அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான கோக்கி இந்திய பெண்கள் அணி வெற்றி.
இந்திய பெண்கள் கோக்கி அணி, அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஆக்கி போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் உலக தர வரிசையில் 12-வது இடம் வகிக்கும் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் 4-வது இடத்தில் இருக்கும்அவுஸ்ரேலியா வீழ்த்தியது.
21-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி கப்டன் ராணி ராம்பால் வெற்றிக்கான கோலை அடித்தார். கடைசியாக ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி, அவுஸ்ரேலியா சந்தித்தது. அதில் அவுஸ்ரேலிய அணி 6-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்ததது. அந்த தோல்விக்கு இந்திய அணி நேற்று பழிதீர்த்தது.
அவுஸ்ரேலியாவில் நடந்து வரும் 4 நாடுகள் இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அவுஸ்ரேலியாவிடம் தோல்வி கண்டது.