Home / செய்திமுரசு (page 721)

செய்திமுரசு

பிரித்தானிய துணைத் தூதுவர் முல்லை.இராணுவத்தளபதியுடன் சந்திப்பு!

சிறீலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்துக்குச் சென்ற சிறிலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில், பிரித்தானியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஸ்ருவார்ட் அன்ட்ரூ போர்லன்டும் பங்கேற்றார். இதன் போது, பரஸ்பரம் ...

Read More »

Tasmania மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா?

அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா? இதற்கான வழிகளை அம்மாநில அரசு இலகுவாக்கியிருக்கிறது. வழமையாக Skilled Migration-க்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த மாநிலங்களுக்குரிய Skilled Occupations List (SOL) தொழிற்பட்டியலிலிருக்கும் வேலைகளுக்கே விண்ணப்பிக்க முடியும். ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் துறை டஸ்மேனியா மாநில தொழிற்பட்டியலில் இல்லாவிட்டாலும் நீங்கள் கீழ்க்காணும் பிரிவுகளின் கீழ் அங்கு குடியேறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். Skilled Independent Subclass 189 Skilled Nominated Subclass 190 Skilled Regional (Provisional) ...

Read More »

தமிழர்கள் தமது விவகாரங்களை கையாள அனுமதிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்

பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற குழுவினரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார். மேலும், இதன் ...

Read More »

இரட்டை குடியுரிமை பெற்ற அவுஸ்ரேலியர்களுக்கு அமெரிக்க பயண தடை இல்லை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் தொடர்பான புதிய உத்தரவினால் இரட்டைக்குடியுரிமை உடைய அவுஸ்ரேலியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு  வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு கொண்டிருப்பவர்கள் குறித்து வெள்ளை மாளிகையுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தியதாக அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதுவர் எனக்கு ...

Read More »

அவுஸ்ரேலியா செல்லும் இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo), இந்த வார இறுதியில் அவுஸ்ரேலியா செல்லவிருக்கிறார். 2014ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு அவுஸ்ரேலியா செல்வது இதுவே முதன்முறை. அண்மை ஆண்டுகளில் இரு நாட்டு உறவு சீராக இல்லாத நிலையில், இந்தோனேசிய அதிபர் இந்த வாரம் சனிக்கிழமை அவுஸ்ரேலியா செல்வதாகத் தகவல் வெளியானது. அதிபர் விடோடோவுடன், அமைச்சர்கள் பலரும் இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிட்னி செல்கின்றனர். ...

Read More »

அவுஸ்திரேலியாவுடனான வர்த்தகஉறவை மேலும் மேம்படுத்த எதிர்ப்பார்ப்பு!

அவுஸ்ரேலியாவுடனான வர்த்தக ரீதியான உறவை மேலும் மேம்படுத்த எதிர்ப்பார்த்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார் குறித்த சந்திப்பை தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர், ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி என இரு நாடுகளும் ஒரே மதிப்பை கொண்டுள்ளது. அதன்படி, இரு நாடுகளும் ...

Read More »

அவுஸ்ரேலியா நிதான ஆட்டம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் விளையாடி வரும் அவுஸ்ரேலிய அணி துவக்க விக்கெட்டுகளை இழந்த நிலையில் நிதானமாக விளையாடி வருகிறது. ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய புவனேஸ்வர் குமார் 11 பேர் ...

Read More »

இந்திய -அவுஸ்ரேலியா மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகியது

இந்­திய – அவுஸ்­­ரே­லிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்­டியமாநிலம் புனேயில் இன்று ஆரம்பமாகியது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலிய அணி 53 ஓட்டங்களைப்பெற்று ஆடிவருகின்றது. ஸ்மித் தலை­மை­யி­லான அவுஸ்­­ரே­லிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக இந்­தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணி சமீப கால­மாக டெஸ்ட்போட்­டி­களில் ...

Read More »

அவுஸ்­­ரே­லி­யாவில் அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம்!

8 வயது சிறுவன் ஒரு­வனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யமை  மற்றும் ஆயு­தத்தைக் காண்­பித்து கொலை அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­களின்  கீழ் 10  வயது சிறுவன் ஒருவன் கைது­செய்­யப்­பட்டு சிறு­வர்­க­ளுக்­கான நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில்  செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. பேர்த் நகரின் வட புற­ந­கரப் பகு­தியை சேர்ந்த குறிப்­பிட்ட சிறுவன் தன்னை விடவும் இரு வயது இள­மை­யான சிறு­வ­னை கத்­தியைக் காண்­பித்து கொலை அச்­சு­றுத்தல் விடுத்து  பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார். பேர்த் சிறுவர் ...

Read More »

அவுஸ்திரேலியா : தொடரை வென்றது இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி இருபதுக்கு – 20 போட்டியில், இலங்கை அணி 41 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. எனினும் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இலங்கை அணி  2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இந்நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய ...

Read More »