அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா? இதற்கான வழிகளை அம்மாநில அரசு இலகுவாக்கியிருக்கிறது.
வழமையாக Skilled Migration-க்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த மாநிலங்களுக்குரிய Skilled Occupations List (SOL) தொழிற்பட்டியலிலிருக்கும் வேலைகளுக்கே விண்ணப்பிக்க முடியும். ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் துறை டஸ்மேனியா மாநில தொழிற்பட்டியலில் இல்லாவிட்டாலும் நீங்கள் கீழ்க்காணும் பிரிவுகளின் கீழ் அங்கு குடியேறுவதற்கு விண்ணப்பிக்க முடியும்.
- Skilled Independent Subclass 189
- Skilled Nominated Subclass 190
- Skilled Regional (Provisional) Subclass 489
உங்களுக்கான sponsor-ஐ வழங்குவதற்கும் டஸ்மேனியா மாநில அரசு தயாராகவுள்ளது. ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. என்னென்ன நிபந்தனைகள் என்று அறிந்து கொள்ளவும் மேலதிக விபரங்களுக்கும் கீழ்க்காணும் இணையத்தளங்களுக்குச் செல்லுங்கள்.
https://www.migration.tas.gov.au/skilled_migrants/skilled_regional
https://www.migration.tas.gov.au/skilled_migrants
https://www.migration.tas.gov.au/points_calculator