8 வயது சிறுவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை மற்றும் ஆயுதத்தைக் காண்பித்து கொலை அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 10 வயது சிறுவன் ஒருவன் கைதுசெய்யப்பட்டு சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
பேர்த் நகரின் வட புறநகரப் பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிறுவன் தன்னை விடவும் இரு வயது இளமையான சிறுவனை கத்தியைக் காண்பித்து கொலை அச்சுறுத்தல் விடுத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
பேர்த் சிறுவர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த சிறுவன் நீதிமன்ற செயற்கிரமங்களை புரிந்து கொள்ளும் பக்குவத்தை அடையாததால் அவனுக்கான தண்டனையை பிற்போட்டு அவனை பிணையில் செல்ல அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.
அதேசமயம் அவனை தீவிர கண்காணிப்பின் கீழ் பாடசாலைக் கல்வியைத் தொடர அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையைச் சேர்ந்த ஏனைய மாணவர்களின் பெற்றோர் சிறுவன் குறிப்பிட்ட பாடசாலையில் தொடர்ந்து கல்வி கற்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.