அவுஸ்ரேலியாவுடனான வர்த்தக ரீதியான உறவை மேலும் மேம்படுத்த எதிர்ப்பார்த்திருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர், அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார் குறித்த சந்திப்பை தொடர்ந்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர், ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி என இரு நாடுகளும் ஒரே மதிப்பை கொண்டுள்ளது. அதன்படி, இரு நாடுகளும் ஒன்றிணைந்து பல்வேறு விடயங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இரு நாடுகளும் புதிய சாதனைகளுடன், எமது அபிலாஷைகளை வென்றெடுக்க புதிய கண்டெடுப்புகளுடனான உற்பத்தி ஓட்டத்தை அதிகரிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
தொடர்ந்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர், தொழில்நுட்பம், இணைய ஒத்துழைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இவை அனைத்திற்கும் மேலாக வர்த்தக ரீதியில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவுஸ்ரேலிய மற்றும் இஸ்ரேல் நிறுவனங்களுக்கு இடையே வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
இதேவேளை, அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்ட முதல் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.