இந்திய -அவுஸ்ரேலியா மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகியது

இந்­திய – அவுஸ்­­ரே­லிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்­டியமாநிலம் புனேயில் இன்று ஆரம்பமாகியது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலிய அணி 53 ஓட்டங்களைப்பெற்று ஆடிவருகின்றது.

ஸ்மித் தலை­மை­யி­லான அவுஸ்­­ரே­லிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டு­வ­தற்­காக இந்­தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணி சமீப கால­மாக டெஸ்ட்போட்­டி­களில் மிகவும் சிறப்­பாக விளை­யாடி வரு­கி­றது.

இலங்கை (2-1), தென்­னா­பி­ரிக்கா (3–0), மேற்­கிந்­தியத் தீவுகள் (2-0), நியூ­ஸி­லாந்து (3–0), இங்­கி­லாந்து (4-0), பங்­க­ளாதேஷ் (1–0) ஆகிய அணி­க­ளுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக 6 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

இந்நிலையில் தற்­போது அவுஸ்­­ரே­லி­யாவை வீழ்த்தி 7ஆவது டெஸ்ட்தொடரை தொடர்ச்­சி­யாக வெல்லும் ஆர்­வத்தில் இந்­தியஅணி களமிறங்கியுள்ளது.

இந்­திய அணி கடை­சி­யாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்­கையில் நடந்த டெஸ்டில் இலங்­கை­யிடம் 63 ஓட்­டங்­களால் தோற்­றது. அதன்­பிறகு விளை­யா­டிய 19 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் இந்­திய அணி தோல்­வியைசந்­திக்­கவில்லை.

தோல்­வியை சந்­திக்­காமல் விளை­யாடிவரும் இந்­திய அணியின் சாதனைஅவுஸ்­­ரே­லிய தொட­ரிலும் நீடிக்­குமா என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அவுஸ்­­ரே­லிய அணி கடை­சி­யாக 2013-ஆம் ஆண்டு இந்­தியாவுக்கு சென்ற­போது 4 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் தோற்று வைட் வொஷ்­ ஆ­னது. இந்த முறை­யா­வது இந்­தி­யாவை வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த அணிஇருக்கிறது.

இந்நலையில் யார் இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது என்னு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.