இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo), இந்த வார இறுதியில் அவுஸ்ரேலியா செல்லவிருக்கிறார். 2014ஆம் ஆண்டு பதவியேற்ற அவர், அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு அவுஸ்ரேலியா செல்வது இதுவே முதன்முறை.
அண்மை ஆண்டுகளில் இரு நாட்டு உறவு சீராக இல்லாத நிலையில், இந்தோனேசிய அதிபர் இந்த வாரம் சனிக்கிழமை அவுஸ்ரேலியா செல்வதாகத் தகவல் வெளியானது. அதிபர் விடோடோவுடன், அமைச்சர்கள் பலரும் இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சிட்னி செல்கின்றனர்.
அவுஸ்ரேலியப் பிரதமர் மெல்கம் டர்ன்புல்லுடன் அதிபர் பேச்சு நடத்துவார் என்று இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டது.
Eelamurasu Australia Online News Portal