செய்திமுரசு

அவுஸ்ரேலிய குடியுரிமையை ரத்து செய்ய குமார் குணரட்ணம் இணக்கம்!

அவுஸ்ரேலிய குடியுரிமையை ரத்து செய்து இலங்கை குடியுரிமையை பெறுவதற்குமுன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் அறிவித்துள்ளார். இலங்கை குடியுரிமையைப் பெறுவதற்காக குமார் குணரட்ணம் அனுப்பி வைத்திருக்கும்விண்ணப்பப் படிவத்தை தான் ஆராய்ந்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களப் பணிப்பாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக சிறைத்தண்டனை அனுபவித்த குமார் குணரட்ணம், இந்த மாதம் 02ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். எவ்வாறாயினும், குமார் குணரட்ணவிற்கு மூன்று மாத கால தற்காலிக வீசாவழங்கியிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குமார் குணரட்னத்திற்கு இலங்கை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் தொலைந்த குறிப்பு புத்தகம் மீண்டும் கிடைத்தது

அவுஸ்ரேலியாவில் உள்ள சிஷ்லோம் பகுதியில் வைத்து மாயமான இலங்கை ஊடகவியலாளரின் வாழ்க்கை குறிப்பு மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள சிஷ்லோம் பகுதியில் இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையை சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஊடகவியலாளர் Don Abeyயின் வாழ்க்கை குறிப்பு காணாமல் போயிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று குறிப்பு புத்தகங்கள் மற்றும் ஒரு USB ஆகியன குறித்த ஊடகவியலாளரின் காரில் வைத்து காணாமல் போயிருந்தன. குறித்த ஆவணங்கள் காணாமல் போயிருந்த சம்பவம் Don Abey என்ற இலங்கை ஊடகவியலாளருக்கு ...

Read More »

எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை

இந்த நாட்டில் நிலவிய எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் அல்லது கூடுதலான அரசியல் கட்சிகளின் சம்மத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இனி வரும் தினங்களில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் சாசனம் சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சம்பூர்- நாவலடி பிரதான வீதிப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று(13) மக்களிடம் அதனைக் கையளிக்கும் நிகழ்வு நாவலடிச் சந்தியில் இடம்பெற்ற வேளை அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஏசுநாதர்!

அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கிறிஸ்துவ கடவுளான ஏசுநாதர் போல் தோற்றம் உடையதால் அவர் செல்லும் இடமெல்லாம் பெரும் வரவேற்பு ஏற்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்தவர் Daniel Christos. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கென்யா தலைநகர் நைய்ரோபியில் இறங்கியது முதல் அவர் எங்கு சென்றாலும் அவரை காண ஒரு பெரும் கூட்டம் கூடியுள்ளது. நீளமான தாடி, சிவப்பு தலைமுடி, செருப்பு அணியாத கால்கள், கையில் நீளமான ஒரு தடியுடன் உள்ள ...

Read More »

கங்காரூவுடன் சண்டையிட்ட நபர்!

அவுஸ்ரேலியாவில் தனது செல்ல நாயை காப்பாற்ற நபர் ஒருவர் கங்காரூவுடன் பாக்ஸிங் சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த காணொளி நபர் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருக்கிறார். அவரது பெயர் கிரீக் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது செல்ல நாயினை கங்காரூ ஒன்று கழுத்தை நெறுக்கிப் பிடித்திருப்பதை பார்த்த கிரீக் காரில் இருந்து குதித்து ஓடுகிறார். பின்னர் தனது நாயை மீட்கும் பணியில் கிரீக் ஈடுபடும் போது கங்காரூ நாயின் மீதான தனது பிடியை இறுக்குகிறது. இதனால் நாய் வலியால் ...

Read More »

எமது இன தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தேசியத்தை நோக்கி முன்னேற வேண்டும்

எமது இன தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தேசியத்தை நோக்கி முன்னேற வேண்டும். சர்வோதய அமைப்பின் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ் நல்லிணக்கம் மீதான வடக்கு, கிழக்கு மக்களின் விரிந்துரைகள் எதிர்பார்ப்புகள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது. இதில் முதலமைச்சரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலமைச்சரின் உரையை வாசித்துள்ளார். அந்த உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சர்வோதய சபைகள் கூடி தேசிய நல்லிணக்கத்தினை தேடி தரும் சந்தர்ப்பம் இது. உங்கள் கலந்துரையாடல்களின்பொழுது சில ...

Read More »

எங்களுக்கு சீனா உத்தரவிட கூடாது- டொனால்ட் டிரம்ப்

ஒன்றுபட்ட சீனா என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என சீனா உத்தரவிட கூடாது என அமெரிக்காவின் எதிர்கால அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளித்துள்ளது. தனி திபெத் கோரிக்கையை முன்வைத்து உலகநாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக தலாய் லாமா பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவ்வகையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை தலாய் லாமா ...

Read More »

இன்று பாரதியார் பிறந்த நாள் – பாரதியார் பாடல்

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை (இன்று) முன்னிட்டு ‘கெஸ்டோ’ ஸ்டுடியோ சார்பில் பாரதியார் எழுதிய ‘ஓடி விளையாடு பாப்பா…’ எனும் பாடல் இன்றைக்குள்ள தலைமுறையினரைக் கவரும் வகையில் ‘சிங்கிள் டிராக்’ ஆக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலைப் பிரபல பின்னணிப் பாடகர் ராகுல் நம்பியார் பாடியுள்ளார். எடிட்டிங்கை சாய்குமாரும், இசையமைப்பை விஷால் சாயும் செய்துள்ளனர். இந்தப் பாடலில், ‘கெஸ்டோ’ ஸ்டுடியோ உருவாக்கிய ‘பொம்மி’ எனும் கார்ட்டூன் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சுட்டி டி.வி-யில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியின் கார்ட்டூன் சித்திரங்களிலும், ‘தி இந்து’ தமிழிலில் முன்னாள் குடியரசுத் தலைவர் ...

Read More »

டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சமீபத்தில் அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி இரண்டு போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 3 போட்டியில் 299 ரன்கள் குவித்தார். இதனால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ...

Read More »

லண்டன் – அவுஸ்ரேலியா: இடைநில்லா விமானச் சேவை – குவாண்டாஸ் நிறுவனம் அறிவிப்பு

பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை அவுஸ்ரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. லண்டனில் இருந்து அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவை நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின் அவற்றை கைவிட்டன. பல ஆண்டுகளாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் இடைநில்லா விமான ...

Read More »