இன்று பாரதியார் பிறந்த நாள் – பாரதியார் பாடல்

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை (இன்று) முன்னிட்டு ‘கெஸ்டோ’ ஸ்டுடியோ சார்பில் பாரதியார் எழுதிய ‘ஓடி விளையாடு பாப்பா…’ எனும் பாடல் இன்றைக்குள்ள தலைமுறையினரைக் கவரும் வகையில் ‘சிங்கிள் டிராக்’ ஆக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலைப் பிரபல பின்னணிப் பாடகர் ராகுல் நம்பியார் பாடியுள்ளார். எடிட்டிங்கை சாய்குமாரும், இசையமைப்பை விஷால் சாயும் செய்துள்ளனர்.

இந்தப் பாடலில், ‘கெஸ்டோ’ ஸ்டுடியோ உருவாக்கிய ‘பொம்மி’ எனும் கார்ட்டூன் கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சுட்டி டி.வி-யில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியின் கார்ட்டூன் சித்திரங்களிலும், ‘தி இந்து’ தமிழிலில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி எழுத்துக்களாக வெளிவந்த ‘என் வாழ்வில் திருக்குறள்’ என்ற கட்டுரைத் தொடரிலும் ‘பொம்மி’ கார்ட்டூன் கதா பாத்திரம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.