பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனை அவுஸ்ரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 14,498 கிமீ தூரம் கொண்ட 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
லண்டனில் இருந்து அவுஸ்ரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை குவாண்டாஸ் நிறுவனம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 14,498 கிமீ தூரத்தை கடந்து செல்லும் இடைநில்லா விமானச் சேவை நீண்ட காலமாக பல்வேறு நிறுவனங்களும் அறிவித்து பின் அவற்றை கைவிட்டன.
பல ஆண்டுகளாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் இடைநில்லா விமான சேவையினை மார்ச் 2018 முதல் வழங்குவதாக குவாண்டாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவின் தேசிய விமானச் சேவையை வழங்கி வரும் குவாண்டாஸ் இடைநில்லா விமானச் சேவையினை போயிங் 787-9 டிரீம்லைனர் ரக விமானங்களை கொண்டு வழங்கும என தெரிவித்துள்ளது.
லண்டன் – அவுஸ்ரேலியா வரை இருக்கும் 14,498 கிமீ தூரத்தை இடைநில்லாமல் கடக்க சுமார் 17 மணி நேரம் ஆகும். அவுஸ்ரேலியாவில் இருந்து லண்டன் செல்லும் பயணிகளுக்கு பெர்த் சிறந்த இடமாக இருக்கும் என அவுஸ்ரேலிய சுற்றுலா துறை அமைச்சர் ஸ்டீவன் கொய்போ தெரிவித்தார்.
அவுஸ்ரேலிய வரும் வெளிநாட்டு பயனிகளில் பெரும்பாலானோர் லண்டனில் இருந்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு முதல் லண்டனில் இருந்து அவுஸ்ரேலிய வருவோர் எண்ணிக்கை கனிசமாக அதிகரித்து இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal