அவுஸ்ரேலியாவில் தனது செல்ல நாயை காப்பாற்ற நபர் ஒருவர் கங்காரூவுடன் பாக்ஸிங் சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குறித்த காணொளி நபர் ஒருவர் தனது காரில் சென்று கொண்டிருக்கிறார். அவரது பெயர் கிரீக் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது செல்ல நாயினை கங்காரூ ஒன்று கழுத்தை நெறுக்கிப் பிடித்திருப்பதை பார்த்த கிரீக் காரில் இருந்து குதித்து ஓடுகிறார்.
பின்னர் தனது நாயை மீட்கும் பணியில் கிரீக் ஈடுபடும் போது கங்காரூ நாயின் மீதான தனது பிடியை இறுக்குகிறது. இதனால் நாய் வலியால் அலறுகிறது.
இந்த நிலையில் வேறு வழியில்லாமல் கங்காரூவின் முகத்தில் குத்துவிட்டு தனது நாயை மீட்டார். கங்காரூவும் பதிலுக்கு சண்டை போடுவது போல் வந்து பிறகு ஓடிவிட்டது.
காணொளியாக வெளியாகியுள்ள இந்த காட்சிகளை இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
Eelamurasu Australia Online News Portal