அவுஸ்ரேலியாவில் உள்ள சிஷ்லோம் பகுதியில் வைத்து மாயமான இலங்கை ஊடகவியலாளரின் வாழ்க்கை குறிப்பு மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் உள்ள சிஷ்லோம் பகுதியில் இந்த மாத ஆரம்பத்தில் இலங்கையை சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஊடகவியலாளர் Don Abeyயின் வாழ்க்கை குறிப்பு காணாமல் போயிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று குறிப்பு புத்தகங்கள் மற்றும் ஒரு USB ஆகியன குறித்த ஊடகவியலாளரின் காரில் வைத்து காணாமல் போயிருந்தன.
குறித்த ஆவணங்கள் காணாமல் போயிருந்த சம்பவம் Don Abey என்ற இலங்கை ஊடகவியலாளருக்கு பேரிழப்பை ஏற்ப்படுத்தியிருந்தது.
நான்கு வருட வாழ்க்கை குறிப்புக்களையே அவர் குறித்த புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார்.
இந்த நிலையில், திங்கட் கிழமை குறித்த ஊடகவியலாளரின் வாழ்க்கை கதையை போன்று ஒரு புத்தகம் அவரது கடைக்குவெளியே ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்துள்ளது.
குறித்த புத்தகத்தை பார்வையிட்ட ஊடகவியலாளருக்கு மிக்க சந்தோசம், புத்தகம் கிடைத்தமை அவருக்கு நிவாரணமாகவே இருந்துள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவில் தான் ஒரு ஊடகவியலாளராக இருந்த போது தன் வாழ்க்கை தொடர்பில் குறிப்பு எழுதியுள்ளார் அந்த ஊடகவியலாளர்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் மேலும் தெரிவிக்கையில்,
87 வயதான என்னுடைய புத்தகத்தை வைத்து வண்ணமயமாக ஆவணப்படுத்த வேண்டும் என குறித்த ஊடகவியலாளர் விளக்கியுள்ளார்.
ஒரு சில இறுதி கிறுக்கல்கள் செய்து புதுவருடத்திற்கு முன்னர் வெளியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வட்டாரங்களில் இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தலாம் என Abey கூறியுள்ளார்.
”இந்த மாதம் 07 ஆம் திகதி காணாமல் போன என்னுடைய புத்தகம் மீண்டும் எனக்கு கிடைத்ததில் நான் சந்தோசமடைகின்றேன் ” என இலங்கையை சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஊடகவியலாளர் Don Abey தெரிவித்துள்ளார்.