அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கிறிஸ்துவ கடவுளான ஏசுநாதர் போல் தோற்றம் உடையதால் அவர் செல்லும் இடமெல்லாம் பெரும் வரவேற்பு ஏற்படுவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரை சேர்ந்தவர் Daniel Christos. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
கென்யா தலைநகர் நைய்ரோபியில் இறங்கியது முதல் அவர் எங்கு சென்றாலும் அவரை காண ஒரு பெரும் கூட்டம் கூடியுள்ளது.
நீளமான தாடி, சிவப்பு தலைமுடி, செருப்பு அணியாத கால்கள், கையில் நீளமான ஒரு தடியுடன் உள்ள அவர் உண்மையான ஏசுநாதர் போல் தோற்றம் அளிப்பது தான் இதற்கு காரணம்.
கென்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ‘ஏசுநாதரே, இந்த உலகிற்கு மீண்டும் வந்ததற்கு நன்றி’ என உச்சிக் குளிர்ந்து பலர் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துள்ளனர்.
உற்சாக மிகுதியால் சிலர் அவரை அழைத்துச் சென்று அவரது பாதங்களை தண்ணீரால் கழுவி பூஜையும் செய்துள்ளது அவருக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், தனது பேஸ்புக் பக்கத்தில் ‘நான் உண்மையான ஏசுநாதர் இல்லை. ஏசுநாதர் போல் நான் நடிக்கவும் இல்லை. இது தான் எனது உண்மையான தோற்றம்’ என தன்னை பின் தொடர்பவர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஆனாலும், அவரை பின் தொடரும் கூட்டத்தினரின் எண்ணிக்கை குறையவில்லை.இச்சம்பவம் தொடர்பாக கென்யாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்று தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
அடிப்படையில் கணிணி பொறியாளரான தான் இயற்கை வழியில் வாழ விரும்புவதால் இதுபோன்ற தோற்றத்துடன் எப்போதும் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், ஏசுநாதர் மீது மிகுந்த பற்றுள்ள கென்யா மக்கள் பேஸ்புக் மூலமாக அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.